நான்கு நாளில் ரூ.31.74 கோடி வசூல் | ரேஸ் 3 - பேனி கான் மோதல் தவிர்ப்பு | அஜய் தேவ்கனை புகழும் இலியானா | புதன் அன்று மாலை ஸ்ரீதேவி இறுதிச்சடங்கு | ரஜினியை முந்திய மோகன்லால் | விமர்சித்த ஹீரோவுக்கு சாய்பல்லவி தந்த பதில் | சரித்திர வீரனாக பிருத்விராஜ் நடிக்கும் 'காளியன்'..! | தாய் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ஸ்ரீதேவி | இந்தியன் 2-விலும் ஊழல் | வீரமாதேவி பரபரப்பை தொடங்கிய சன்னி லியோன் |
துபாயில் காலமான நடிகை ஸ்ரீதேவி குறித்து, கலவையான சில தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில ஆச்சர்யமான தகவல்களும் சில பிரபலங்கள் மூலமாக வெளி வருகின்றன.
தமிழில் 1986-ஆம் வருடத்தில் ரஜினியுடன் 'நான் அடிமை இல்லை' படத்தில் நடித்ததுடன் தமிழுக்கு குட்பை சொல்லிவிட்டு பாலிவுட்டுக்கு சென்றார் ஸ்ரீதேவி. ஆனால் அதற்கு பத்துவருடம் முன்பே அதாவது 1976லேயே மலையாளத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
இதனால் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த சமயத்தில் தமிழில் கூட தேடிவந்த வாய்ப்புக்களை மறுத்த நிலையில் 1996ல் மலையாளத்தில் 'தேவராகம்' என்கிற படத்தில் ஸ்ரீதேவி நடித்தார் என்றால் அது ஆச்சர்யமான விஷயம் தான்.
ஆனால் ஸ்ரீதேவியின் அம்மா ராஜேஸ்வரி தான், அந்தப்படத்தின் இயக்குனர் பரதனுக்கு நன்றிக்கடன் தீர்க்கும் விதமாக ஸ்ரீதேவியை அந்தப்படத்தில் நடிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான காலத்தில் அவரை விளம்பரப்படம் ஒன்றிற்காக முதன்முதலாக புகைப்படம் எடுத்தவர் தான் இயக்குனர் பரதன்.
பின்னாளில் தேவராகம் படத்தில் ஸ்ரீதேவி நடித்தால் நன்றாக இருக்கும் என கருதிய பரதன், அவரிடம் கதைசொல்லி கால்ஷீட் கேட்பதற்காக சென்றபோது அவரை ஞாபகம் வைத்திருந்த ஸ்ரீதேவியின் அம்மா, உங்கள் படத்தில் என் மகள் நடிப்பாள் என வாக்கு கொடுத்தார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவந்த சமயத்தில், ஸ்ரீதேவியின் அம்மா மூளை அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் கூட, அமெரிக்காவில் இருந்து இந்தப்படத்திற்காக அவ்வப்போது வந்து நடித்துக் கொடுத்துவிட்டு சென்றாராம் ஸ்ரீதேவி.
இந்த தகவலை மறைந்த இயக்குனர் பரதனின் மனைவியும் மலையாள நடிகையுமான கே.பி.ஏ.சி லலிதா, ஸ்ரீதேவி குறித்த தனது நினைவுகளாக பகிர்ந்துகொண்டுள்ளார்.