கார்த்திக் சுப்பாராஜ் தரும் உத்தரவாதம் | ஆக்ஷ்னை விரும்பும் காஜல் அகர்வால் | ஸ்ரீதேவியும் ஐ.வி.சசியும் 'அ ஆ' வரிசை படங்களும்..! | கதாநாயகியை அறைந்த குற்ற உணர்ச்சியால் தவித்த ஜெயசூர்யா | குளியல் தொட்டியில் மூழ்கி இறந்தார் : ஸ்ரீதேவி மரணம் குறித்து புதிய தகவல் | ஸ்ரீதேவி குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல செல்கிறேன் : கமல் | மோகன்லாலுக்காக போடப்பட்ட 25 ஸ்கெட்ச் | மொழியை நேசியுங்கள் : மலையாளத்தில் டப்பிங் பேசிய சித்தார்த்..! | நிம்மதி பெருமூச்சுவிட்ட காளிதாஸ் ஜெயராம் | ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்தது அதிர்ஷ்டம் : ராதா |
ரஜினி நடித்து முடித்துள்ள காலா படம் ஏப்ரல் மாதம் 27ம் தேதி வெளியாகிறது. லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இப்படம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் பீட்சா, ஜிகிர்தண்டா, இறைவி ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் பற்றி கார்த்திக் சுப்பாராஜிடம் கேட்டால், ''இந்த படத்தில் பிரம்மாண்டம் இருக்காது. ஆனால் கதையிலும் திரைக்கதையிலும் பிரம்மாண்டம் இருக்கும்.” என்கிறார்.
நானும் ரஜினி ரசிகன். அவருடைய படத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் என்பது எனக்கும் தெரியும். அனைத்து அம்சங்களும் என்படத்தில் இருக்கும்' என்று உத்தரவாதம் தருகிறார் கார்த்திக் சுப்பாராஜ்.