மாதவனுக்கு தோளில் அறுவை சிகிச்சை | ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கு நாளைக்கு ஒத்தி வைப்பு? | வட சென்னை கதை என்ன? | டுவீட் போட்டு வம்பில் மாட்டிக் கொண்ட கஸ்தூரி | கார்த்திக் சுப்பாராஜ் தரும் உத்தரவாதம் | ஆக்ஷ்னை விரும்பும் காஜல் அகர்வால் | ஸ்ரீதேவியும் ஐ.வி.சசியும் 'அ ஆ' வரிசை படங்களும்..! | கதாநாயகியை அறைந்த குற்ற உணர்ச்சியால் தவித்த ஜெயசூர்யா | குளியல் தொட்டியில் மூழ்கி இறந்தார் : ஸ்ரீதேவி மரணம் குறித்து புதிய தகவல் | ஸ்ரீதேவி குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல செல்கிறேன் : கமல் |
'இறுதிச் சுற்று, விக்ரம் வேதா' படங்களின் மூலம் மீண்டும் தமிழில் தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டவர் நடிகர் மாதவன். அவருக்கு சமீபத்தில் தோளில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இது பற்றிய தகவலை மாதவனே டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
புதிதாக எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்க மாதவன் ஒப்பந்தமாகவில்லை. கௌதம் மேனன் இயக்க உள்ள 'ஒன்றாக' என்ற படத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது 'பிரீத்' என்ற வெப் சீரீஸ் ஒன்றில் நடித்திருந்தார் மாதவன். அது கடந்த மாதம் வெளியானது. அதற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
டுவிட்டரில் தன்னுடைய அறுவை சிகிச்சை பற்றி மாதவன் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளதற்கு ரசிகர்கள், பிரபலங்கள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.