குளியல் தொட்டியில் மூழ்கி இறந்தார் : ஸ்ரீதேவி மரணம் குறித்து புதிய தகவல் | ஸ்ரீதேவி குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல செல்கிறேன் : கமல் | மோகன்லாலுக்காக போடப்பட்ட 25 ஸ்கெட்ச் | மொழியை நேசியுங்கள் : மலையாளத்தில் டப்பிங் பேசிய சித்தார்த்..! | நிம்மதி பெருமூச்சுவிட்ட காளிதாஸ் ஜெயராம் | ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்தது அதிர்ஷ்டம் : ராதா | ஸ்ரீதேவி நடிக்க மறுத்த 'ஜுராசிக் பார்க், பாகுபலி' | ஸ்ரீதேவி மறைவு, எந்த இரங்கலும் சொல்லாத அஜித், விஜய் | ஆபத்தில் தள்ளிய அழகு? | சாய் பல்லவிக்கு அதிர்ச்சி தந்த ஏ.எல்.விஜய் |
சினிமாவில் படங்களை திரையுடுவதில் முக்கிய பங்கு வகிக்கும் க்யூப் மற்றும் யு எப் ஓ உள்ளிட்ட நிறுவனங்களின் கட்டணக் கொள்ளைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் மார்ச்-1 முதல் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகங்களும் சேர்ந்து வேலைநிறுத்தத்தை துவங்க உள்ளன.
இதனால் மார்ச்-1 முதல் புதிய படங்கள் எதுவும் வெளியாக வாய்ப்பில்லை. அதேசமயம் மலையாள திரையுலகம் மட்டும் இதிலிருந்து சற்றே விலகி, மார்ச்-1ஆம் தேதி மட்டும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறது. ஆனால் வழக்கம்போல மார்ச்-2, 9 ஆகிய தேதிகளில் ஏற்கனவே திட்டமிட்டுள்ள படங்கள் ரிலீஸாக இருக்கின்றன.
இந்த முடிவால் ஜெயராமின் மகன் காளிதாஸ் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். மலையாளத்தில் அவர் அறிமுகமாகி நடித்துள்ள 'பூமரம்' படம் இரண்டு வருடங்களாக பல சிரமங்களை கடந்து வரும் மார்ச்-9ஆம் தேதி தான் ரிலீஸாக இருக்கிறது.
மலையாள திரையுலகம் ஒரு நாள் மட்டுமே அடையாள வேலைநிறுத்தம் செய்வதால் தனது படம் திட்டமிட்டபடி வெளியாகிவிடும் என மகிழ்ச்சியில் இருக்கிறாராம் காளிதாஸ் ஜெயராம்.