ஸ்ரீதேவி மறைவு : குடும்பத்தார் வேண்டுகோள் | ஸ்ரீதேவி உடலை கொண்டு வர தாமதம் : இறுதிச்சடங்கும் தாமதம்? | துபாய் ஹோட்டலில் ஸ்ரீதேவிக்கு என்ன நடந்தது? | மயிலை யாரும் மறக்க முடியாது : சிவகுமார் | ஈடு செய்ய முடியாத இழப்பு : ஸ்ரீதேவிக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் | ஸ்ரீதேவி மறைவு : ஹிந்தி திரையுலகம் அதிர்ச்சியுடன் கூடிய இரங்கல் | கனவு மடிந்துவிட்டது : ஸ்ரீதேவியின் மறைவுக்கு இளம் நடிகைகள் இரங்கல் | இந்தியாவின் திறமையான நடிகை ஸ்ரீதேவி : இளையராஜா | மூன்றாம் பிறை பாடல் தான் பாட தோன்றுகிறது : ஸ்ரீதேவி குறித்து கமல் உருக்கம் | சினிமா ஒரு சாதனையாளரை இழந்துவிட்டது : ரஜினி |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று இந்தியா கொண்டு வரப்பட இருக்கிறது. மாலைக்கு மேல் இறுதிச்சடங்கு நடைபெற இருக்கிறது. இதனிடையே, நேற்று ஸ்ரீதேவியின் மறைவு குறித்து அவரது கணவர் போனி கபூர் சார்பில் யாஷ்ராஜ் பிலிம்ஸ் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்கள். அதில், “போனி கபூர், ஜான்வி கபூர், குஷி கபூர் மற்றும் கபூர், அய்யப்பன், மர்வா குடும்பத்தினர் ஸ்ரீதேவி கபூரின் திடீர் மறைவால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த துக்க சமயத்தில் மொத்த மீடியாவின் ஆதரவிற்கும், பிரார்த்தனைக்கும் நன்றி. மறைந்த ஸ்ரீதேவி கபூரின் உடல் இந்தியாவிற்கு (இன்று) வர உள்ளது. அது பற்றிய விவரங்களை கிடைக்கப் பெறும் போது தெரிவிக்கிறோம். தயவு செய்து யாரும் இது தொடர்பாக குடும்பத்தினருக்கு போன் செய்து கேட்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளனர்.