சென்னை:சென்னை மாநகராட்சி, 2017 - 2018 நடப்பாண்டின் சொத்து வரி வசூல், 593 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதனால், இந்த நிதியாண்டில், 800 கோடி ரூபாய் இலக்கை எட்டுவதற்கானநடவடிக்கையில், மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள், தீவிரம் காட்டி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சிக்கான வரி வருவாயில், பிரதானமானது, சொத்து வரி. நடப்பாண்டில், 800 கோடி ரூபாய் வரி வசூலிக்க, மாநகராட்சி இலக்குநிர்ணயித்துள்ளது.
நடவடிக்கை
இதில், நேற்று முன்தினம் வரை, 593 கோடி ரூபாய் சொத்து வரிவசூலிக்கப்பட்டுள்ளது. விரைவில், 800 கோடி ரூபாய் இலக்கை எட்ட, மாநகராட்சி வியூகம் வகுத்து, அதிரடி நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக,
அனைத்து மண்டல உதவி வருவாய் அலுவலர்கள் தலைமையில், வருவாய் துறை ஊழியர்கள், வரி வசூல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஊழியர் பற்றாக்குறையால், மற்ற
துறைசார்ந்த ஊழியர்களும், வரி வசூலில் ஈடுபட்டுவருகின்றனர்.
நடப்பாண்டின்இரண்டாவது அரையாண்டு முடிய, இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தற்போதே, மாநகராட்சியின் சொத்துவரி வசூல், 593 கோடி ரூபாயை எட்டி உள்ளது.நாள் ஒன்றுக்கு, 2 - 3 கோடி ரூபாய் வரை வசூலாவதால், 800 கோடி ரூபாய் வரி வசூலிக்க முடியும் என, வருவாய் துறை ஊழியர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
நோட்டீஸ்
சொத்து வரி செலுத்தாத நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் மீது, 'நோட்டீஸ், சீல்' போன்ற நடவடிக்கையில், வருவாய் துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இதனால், சொத்துவரி செலுத்தாமல் உள்ளோர், உடனடியாக பணம் செலுத்தி வருகின்றனர்.மாநகராட்சி வருவாய் துறைஅதிகாரிகள்கூறியதாவது:
சொத்து வரியை உயர்த்தினால் மட்டுமே,
தற்போது, மாநகராட்சி வாங்கியுள்ள கடன் களை அடைக்க வும், முழுமையான கட்ட
மைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் முடியும். கடந்த, 18 ஆண்டுகளாக
உயர்த்தப்படாத சொத்து வரியை சீராய்வு செய்து, வருவாய் அதிகரிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், ஆண்டிற்கு, 1,000 -- 1,200 கோடி ரூபாய் வரை, சொத்து வரி வசூலிக்க முடியும். இவ்வாறு அவர்கள்கூறினர்.
சொத்து வரி வசூல் குறித்து, மாநகராட்சி கமிஷனருக்கு, தினமும் மண்டல வாரியாக பட்டியல் அனுப்பப்பட்டு வருகிறது. அது மட்டு மின்றி ஒவ்வொரு வாரமும், சொத்துவரி வசூல் குறித்து, கமிஷனர்,மண்டல உதவி வரு வாய் அலுவலர்களிடம், தனித்தனியே வசூல் குறித்து கேட்டறிந்து வருகிறார். இதனால் அனைத்து மண்டல உதவி வருவாய் அலுவலர்களும், வசூலில் தீவிரமாக களம் இறங்கி வருகின்றனர். சொத்து வரி செலுத் தாதவர்கள் மீது, ஜப்தி நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (1)
Reply