டுவீட் போட்டு வம்பில் மாட்டிக் கொண்ட கஸ்தூரி | கார்த்திக் சுப்பாராஜ் தரும் உத்தரவாதம் | ஆக்ஷ்னை விரும்பும் காஜல் அகர்வால் | ஸ்ரீதேவியும் ஐ.வி.சசியும் 'அ ஆ' வரிசை படங்களும்..! | கதாநாயகியை அறைந்த குற்ற உணர்ச்சியால் தவித்த ஜெயசூர்யா | குளியல் தொட்டியில் மூழ்கி இறந்தார் : ஸ்ரீதேவி மரணம் குறித்து புதிய தகவல் | ஸ்ரீதேவி குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல செல்கிறேன் : கமல் | மோகன்லாலுக்காக போடப்பட்ட 25 ஸ்கெட்ச் | மொழியை நேசியுங்கள் : மலையாளத்தில் டப்பிங் பேசிய சித்தார்த்..! | நிம்மதி பெருமூச்சுவிட்ட காளிதாஸ் ஜெயராம் |
இந்திய சினிமாவில் குயினாக வலம் வந்த நடிகை ஸ்ரீதேவி, துபாயில் மரணம் அடைந்தார். திரையுலகினர் பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். சந்திப்பு என்ற படத்தில் ஸ்ரீதேவியுடன் நடிகை ராதாவும் நடித்தார். ஸ்ரீதேவி மரணம் குறித்து ராதா நம்மோடு பகிர்ந்ததாவது...
ஸ்ரீதேவி அக்கா பற்றிய நினைவு தான் ஓடிக்கொண்டே இருக்கிறது. நாங்கள் இருவரும் இணைந்து ஒரே ஒரு படம் தான் நடித்துள்ளோம். சிவாஜியுடன், சந்திப்பு என்ற படம். அதில் அவர் சிவாஜி ஜோடியாகவும், நான், பிரபு ஜோடியாகவும் நடித்தேன். நாங்கள் இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் என்று அவ்வளவாக இல்லை ஒரு காட்சி இருக்கும் என நினைக்கிறேன்.
ஆனால் ஒரு பாடலில் இருவரும் இணைந்து ஆடியிருப்போம். அதை அதிர்ஷ்டமாக கருகிறேன். நான் சினிமாவில் நுழைந்த சமயத்தில் மிகப்பெரிய நடிகையாக திகழ்ந்த அவருடன் இணைந்து நடித்தது பெருமை. அந்த நினைவுகளே ஓடிக்கொண்டு இருக்கிறது.
சினிமாவில் குயினாக ஸ்ரீதேவி இருந்த காலக்கட்டத்தில் நானும் சினிமாவில் இருந்ததை பெருமையாக நினைக்கிறேன். அவரைப்பற்றி சொல்ல வார்த்தைகள் வரவில்லை. இரண்டு பெண் பிள்ளைகளுக்கு அம்மாவாக இருந்தார். அவர்களுக்காக என்ன கனவெல்லாம் கண்டிருந்தாரோ, ஏன் இப்படி அவருக்கு நடந்தது என தெரியவில்லை.
இவ்வாறு நடிகை ராதா கூறியுள்ளார்.