ஸ்ரீதேவி திடீர் மரணம்: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் | ஏதோ தப்பா படுது- ஸ்ரீதேவி மறைவுக்கு முன் அமிதாப் ட்வீட் | ஐந்து வருடங்கள் ஆறப்பட்ட கதை | ரித்திகா சிங் நடிக்க மறுத்த படத்தில் நிகிஷா பட்டேல் | கெட்டப்பை மாற்றும் சிவகார்த்திகேயன் | அஜீத்தின் விசுவாசம், வீரம் படத்தின் இரண்டாம் பாகமா? | கரு பட யூனிட்டை வியக்க வைத்த சாய் பல்லவி | மகாநதியில் நடிக்க மறுத்த அனுஷ்கா | பிகினிக்கு மறுப்பு சொன்ன அனுபமா | ஸ்ரீதேவியின் கடைசி படம் ஜீரோ |
பிரேமம் மலையாள படத்தில் அறிமுகமானவர் சாய் பல்லவி. அதையடுத்து பிடா, எம்சிஏ போன்ற தெலுங்கு படங்களில் நடித்தார். அந்த படங்களும் வெற்றி பெறவே இப்போது தெலுங்கிலும் பேசப்படும் நடிகையாகி விட்டார் சாய் பல்லவி. இந்த நிலையில், தற்போது ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள கரு படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார் அவர். ஆனால் முதலில் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று ஏ.எல்.விஜய் அவரை தொடர்பு கொண்டபோது கதையைகூட கேட்காமல் நடிக்க மறுத்து விட்டாராம் சாய்பல்லவி. அதன்பிறகு அவரது அம்மாவை போனில் தொடர்பு கொண்டு கதையை சொல்லியிருக்கிறார் ஏ.எல்.விஜய். அதன்பிறகுதான் நடிக்க ஒப்புக்கொண்டாராம் சாய்பல்லவி.
அதோடு, இந்த கரு படத்தில் நடித்தபோது ஒவ்வொரு காட்சியையும் உள்வாங்கி நடித்த சாய் பல்லவி, காட்சிகளில் நடித்து முடித்ததும் ஓடிச்சென்று மானிட்டரில் பார்ப்பாராம். அது தனக்கு திருப்தியாக இருந்தால் மட்டுமே அதோடு நிறுத்திக்கொள்வாராம். இல்லையேல் மீண்டும் ரீடேக் எடுக்க சொல்வாராம். அந்த அளவுக்கு தான் நடிக்கிற ஒவ்வொரு காட்சிகளும் சிறப்பாக வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார் சாய்பல்லவி.
அவரது ஆர்வத்தைப்பார்த்து, கரு படத்தில் அவருக்கு அப்பாவாக நடித்துள்ள நிழல்கள் ரவி, அம்மாவாக நடித்துள்ள கடலோரக் கவிதைகள் ரேகா ஆகியோர், எதிர்காலத்தில் சாய்பல்லவி மிகப்பெரிய நடிகையாக வருவார். அவரை மனதில் கொண்டு டைரக்டர்கள் கதை எழுதும் நிலை ஏற்படும் என்கிறார்கள்.