சென்னை:''தமிழகத்தில், நம்மை வெல்ல நினைத்த கட்சிகள் எல்லாமே, காற்று போன பலுான் போல் சுருண்டு கிடக்கின்றன. தற்போது, அரசியல் வானில், புதிது புதிதாக காற்றடைக்கப்பட்ட பலுான்கள் பறக்க துவங்கி உள்ளன.
''அரிதாரம் பூசிய வண்ண பலுான்கள், பார்க்க அழகாகத் தான் இருக்கும். அந்த பலுான்கள், வெகு விரைவில் வெடித்து, சிதறி வீழ்ந்து போவதை, நாம் பார்க்கத் தான் போகிறோம்,'' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான, பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
புதிய நாளிதழ்
சென்னை, ராயப்பேட்டை யில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், ஜெ., பிறந்த நாளையொட்டி, அவரது முழு உருவச் சிலை திறப்பு விழா மற்றும் கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழ், 'நமது புரட்சித் தலைவி அம்மா' வெளியீட்டு விழா, நேற்று நடந்தது. காலை, 11:10 மணிக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், பழனிசாமி ஆகியோர், ஆளுக்கொரு, 'ரிமோட்' உதவியுடன், ஜெ., சிலையை திறந்து வைத்தனர். அதன்பின், புதிய நாளிதழை வெளியிட்டனர்.
பன்னீர்செல்வம் பேசியதாவது:
ஜெ., பிறந்த நாளை, கண்ணீரையும், துக்கத் தையும்,புன்னகை என்ற போர்வையால் மறைத்து, அவருக்கு சிலை வைத்து கொண்டாடுகிறோம். அ.தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்படும் நலத்திட்டங்களால், மக்கள் பலன் பெற்றுள்ளனர்; பாதுகாப்பாக உள்ளனர். மகளிருக்காக, ஜெ., உருவாக்கிய திட்டங்கள் ஏராளம்.ஜெ., வழங்கிய திட்டங்களில், ஒன்று தான், இருசக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டம். அத்திட்டம், இன்று பிரதமரால் துவக்கி வைக்கப்பட உள்ளது.
மறக்க முடியாதது:
சொன்னதை
செய்கிற ஆட்சி, ஜெ., ஆட்சி; சொல்லாததையும் செய்கிற ஆட்சி, ஜெ., ஆட்சி.ஜெ., நம்மை விட்டு பிரிந்ததும், திசை தெரியாத கப்பலாய் தவித்தோம். ஜெ., தந்த ஆசி, கற்று தந்த பயிற்சி, நம்மை வழி
நடத்தியது. ஜெ., மீது, தமிழக மக்கள் காட்டிய பாசம், மறக்க முடியாதது.
அவற்றை எண்ணி, நம்மை நாமே தேற்றி, இன்னும், 100 ஆண்டுகளானாலும், இந்த
இயக்கம் அழியாது என்ற, சூளுரையை காப்பாற்ற, ஒற்றுமையுடன் பணியாற்றுகிறோம்.
இந்த
ஆட்சியை, ஜெ., நடத்துகிறார். இந்த இயக் கத்தை, ஜெ.,வின் தொண்டர்கள்
இயக்குகின்றனர். ஜெ., இருந்த போது, நம் கட்சியிலிருந்த ஒற்றுமை,
எம்.ஜி.ஆருக்கு கிடைத்த பெருமை. கட்சிக்கு கிடைத்த வெற்றிகள்,ஜெ.,க்கு கிடைத்த பெருமை. தற்போது, கட்சியில் உள்ள ஒற்றுமையும், கட்சிக்கு கிடைக்கும் வெற்றியும், ஜெ.,க்கு சமர்ப்பிக்கப்படும் பெருமை. இதை, நாம் தொடர்ந்து பெற்றுத் தர வேண்டும்.
'ஜெ.,வின் விசுவாச தொண்டர்களை வீழ்த்தி விடலாம்' என்ற, வீணான எண்ணத்துடனும், தமிழக மக்களை உயர்த்துவதற்காக, உழைக்கும் நம் இயக்கத்தை வென்று விடலாம் என்ற கனவுடனும், ஏற்கனவே பலர் அலைந்து கொண்டிருக்கின்றனர். இப்போது சிலர், மக்களை காக்கப் போகும் ரட்சகர் கள், தாங்களே என, வீர வசனம் பேசுகின்றனர். புதிதாக, அரசியல் அவதாரம் எடுத்துள்ளவர்கள் பேசும் வசனங்கள் எல்லாம், வெறும் புஸ்வாண மாக, ஆரவாரமில்லாமல் அடங்கிப் போய்விடும். நல்லவர்கள் போல அவர்கள் போடும் வேஷம், வெகு விரைவில் கலைந்து விடும். அவர்களின் குழுக்களும், கலகலத்து போய் விடும்.
ஏற்கனவே, தமிழகத்தில், நம்மை வெல்ல நினைத்த கட்சிகள் எல்லாமே, காற்று போன பலுான் போல் சுருண்டு கிடக்கின்றன.தற்போது, அரசியல் வானில், புதிது புதிதாக காற்றடைக்கப்பட்ட பலுான்கள் பறக்க துவங்கி உள்ளன. அரிதாரம் பூசிய வண்ண பலுான் கள், பார்க்க அழகாகத் தான் இருக்கும். அவை, வெகு விரைவில் வெடித்து, சிதறி வீழ்ந்து போவதை, நாம் பார்க்கத் தான் போகிறோம்; இந்த நாடும் பார்க்கத் தான் போகிறது.
ஜெ., செய்த சாதனைகளையும், தீட்டிய திட்டங்களையும், அதனால் பெற்ற பயன்களையும், தமிழக மக்கள் மறக்கவில்லை. என்றைக்கும், ஜெ., சொல்லே எங்களுக்கு வேதம். ஜெ., இல்லாத நிலையை பயன்படுத்தி, குழப்பம் ஏற்படுத்தி விடலாம்; ஒற்றுமையை சீர்குலைத்து விடலாம் என, எதிரிகளும், துரோகிகளும் சதித் திட்டம் தீட்டுகின்றனர். அந்த சதித்
திட்டத்தை உடைத்து எறிவோம்; வஞ்சக வலைகளை அறுத்தெறிவோம். எதிரிகளையும்,
துரோகிகளையும் வெற்றி கொள்வோம். எப்போது தேர்தல் வந்தாலும், அதில் வெற்றி
பெறுவோம் என, இரு தலைவர்களின்
சிலை முன் சபதம் ஏற்போம்.இவ்வாறு அவர்
பேசினார்.
அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும்,முதல்வருமான, பழனிசாமி பேசியதாவது:
ஜெ., இந்த இயக்கத்தை கட்டிக்காத்து, நம்மிடம் ஒப்படைத்து சென்றுள்ளார். இந்தியாவிலே கட்டுக்கோப்பான இயக்கம், அ.தி.மு.க., என்பதை, ஜெ., நிரூபித்துக் காட்டினார். அடிமட்ட தொண்டனும், உயர்ந்த பதவிக்கு வர முடியும் என்ற நிலையை ஏற்படுத்தினார்.ஜெ., மறைந்தாலும், அ.தி.மு.க., தொண்டர்களின் நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் விட்டுச் சென்ற பணியை, ஜெ., அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
ஜெ., முதல்வராக இருந்த காலம், தமிழகத்திற்கு பொற்காலமாக இருந்தது. ஜெ., சட்டசபையில், 110 விதி படிக்கிறார் என்றால், மக்கள், இன்று என்ன செய்தி வரும் என, ஆவலோடு காத்திருப்பர். மக்களுக்கு, இனிப்பான செய்தியாக வரும்.அனைத்து மக்களும் நலத்திட்டம் பெற்ற மாநிலம், தமிழகம் மட்டுமே. ஜெ., சட்டசபையில் பேசுகையில், 'எனக்கு பின்னும், 100 ஆண்டு கள், கட்சி ஆட்சியில் இருக்கும்' என்றார். அதை நிரூபித்து காட்டி உள்ளோம்.
சோதனைகள் வந்த போதும், ஆட்சியை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும்; கட்சியை உடைக்க வேண்டும் என, சிலர் பேசுகின்றனர். அவர்களின் கனவு, பகல் கனவாகவே உள்ளது.ஜெ., ஆசி இருக்கும் வரை, இந்த ஆட்சியை தொட்டு கூட பார்க்க முடியாது. 1 1/2 கோடி, அ.தி.மு.க., தொண்டர்கள், சிப்பாயாக இருந்து, கட்சி, ஆட்சியை காக்கின்றனர். நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்தி, அதில் குளிர் காய நினைக்கின்றனர்; அது, ஒரு போதும் நடக்காது.நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை, அனைவரும் ஒருமித்த கருத்தோடு இயங்கி வருகிறோம். எங்களை யாராலும் பிரிக்க முடியாது. கட்சியையும், ஆட்சியையும், இரு கண்களை போல் காத்து வருகிறோம்.இவ்வாறு முதல்வர் பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (26)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply