ஸ்ரீதேவி மகளுக்கு கமல் ஆறுதல் | ஸ்ரீதேவி மறைவு : அனில் கபூர் வீட்டில் குவிந்த திரைப்பிரபலங்கள் | மாதவனுக்கு தோளில் அறுவை சிகிச்சை | ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கு நாளைக்கு ஒத்தி வைப்பு? | வட சென்னை கதை என்ன? | டுவீட் போட்டு வம்பில் மாட்டிக் கொண்ட கஸ்தூரி | கார்த்திக் சுப்பாராஜ் தரும் உத்தரவாதம் | ஆக்ஷ்னை விரும்பும் காஜல் அகர்வால் | ஸ்ரீதேவியும் ஐ.வி.சசியும் 'அ ஆ' வரிசை படங்களும்..! | கதாநாயகியை அறைந்த குற்ற உணர்ச்சியால் தவித்த ஜெயசூர்யா |
ஸ்ரீதேவி மறைவுக்கு சில நிமிடங்கள் முன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பகிர்ந்த ட்வீட் வைரலாகி வருகிறது. நேற்றிரவு துபாய் நேரப்படி 11.30 மணியளவில் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீதேவி மறைவு செய்தி இந்திய நேரப்படி 3 மணியளவில்தான் ஊடகங்களில் வெளியானது.
ஆனால் நேற்றிரவு 1.15 மணியளவில் நடிகர் அமிதாப் பச்சன் தன் டிவிட்டர் பக்கத்தில் ஏதோ தப்பா படுது.. வித்தியாசமான பதட்டம் நிலவுகிறது.. ஏன் என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவர் ட்வீட் செய்த அடுத்த சில நிமிடங்களில் ஸ்ரீதேவி மறைவு செய்தி வெளியானது. இதனையடுத்து அமிதாப் பச்சனின் ட்விட்டர் பதிவை நெட்டிசன்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். ஸ்ரீதேவியின் மறைவுப் பற்றி அமிதாப் பச்சனின் ஆறாம் உணர்வுக்கு முன்பே தெரிந்திருக்கிறது , இதை நம்பவே முடியவில்லை என்று நெட்டிசன்ஸ் ரீட்வீட் செய்து வருகின்றனர்.