ஆன்மிகத்தின் பிறப்பிடம் இந்தியா தான்! ஆரோவில் விழாவில் பிரதமர் மோடி பேச்சு Dinamalar
பதிவு செய்த நாள் :
ஆன்மிகத்தின் பிறப்பிடம் இந்தியா தான்!
ஆரோவில் விழாவில் பிரதமர் மோடி பேச்சு

புதுச்சேரி:''பழங்காலம் தொட்டே, ஆன்மிகத்தின் பிறப்பிடம் இந்தியா தான்,'' என, ஆரோவில் பொன் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Aanmeegam,Auroville,PM Modi, ஆன்மிகம், இந்தியா ,ஆரோவில், பிரதமர் மோடி ,மோடி பேச்சு, புதுச்சேரி, பிரதமர் நரேந்திர மோடி , ஆரோவில் சர்வதேச நகரம் , ஆரோவில் பவுண்டேஷன் சேர்மன் கரண்சிங், உலக யோகா தினம்,ஆரோவில் பொன் விழா , ஸ்ரீ அன்னை, Spirituality, India,  Prime Minister Modi, Modi Talk, Puducherry,
 Prime Minister Narendra Modi, Auroville International City, Auroville Foundation Chairman Karan Singh, World Yoga Day, Auroville Golden Festival, sri annai ,


புதுச்சேரி அருகே, ஆரோவில் சர்வதேச நகரம் உதயமாகி, 50 ஆண்டு கள் நிறைவடைவதை முன்னிட்டு, நேற்று பொன் விழா கொண்டாடப் பட்டது.


பொன்விழா



ஆரோவில் பவுண்டேஷன் சேர்மன் கரண்சிங் வரவேற்றார். பொன் விழா ஆண்டு சிறப்பு தபால் தலை மற்றும் ஆரோவில் கட்டட கலை புத்தகத்தை வெளியிட்டு, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:அரவிந்தரின் பார்வை தான், இந்தியாவின் ஆன்மிக தலைமையை பறைசாற்றுவதாக இன்றைக்கும் உள்ளது. அரவிந்தர், மனிதனுக்கு என்ன தேவையோ, அதை நடைமுறையில் ஆராய்ந்து

செயல்படுத்தி உள்ளார். அவர், தத்துவவாதி, கவிஞர் என, பல முகங்கள் கொண்டவர். அதை நாட்டிற்கும், சமூகத்திற்கும் அர்ப்பணித்துள்ளார்.


கடந்த, 50 ஆண்டுகளாக சமூகம், கலாசாரம், ஆன்மிகம், பொருளாதாரம் மற்றும் புதுமைக்கு, ஆரோவில் அடித்தளமாக இருந்து வருகிறது.பழங்காலம்தொட்டே, ஆன்மிகத்தின் பிறப்பிடம் இந்தியா தான். இந்தியாவில் தான், பல மதங்கள் தோன்றின.


இந்தியாவின் ஆன்மிகத்தை அங்கீகரித்து தான், ஜூன் 21ல், உலக யோகா தினம் அறிவிக்கப்பட்டது. ஆரோவில் சாசனத்தை, ஸ்ரீ அன்னை தன் கைப்பட பிரெஞ்சு மொழியில் எழுதியுள்ளார். ஆரோவில்லில் வசிக்க, ஒருவர் தெய்வீக உணர்வுக்கு, விருப்பத் துடன் தொண்டு செய்பவராக இருக்க வேண்டும்.


இந்தியா, உலகத்திற்கு தலைமை தாங்க வேண்டும். அதற்கு அரவிந்தரின் கருத்துகள் தான் வழி காட்டியாக இருக்கிறது. உலகின் ஆன்மிக தேடல்களுக்கான மையமாக, ஆரோவில்லை உருவாக்க வேண்டும் என்பதேஸ்ரீ அன்னையின் எண்ணம்ஆகும்.


முன்னோடி



உலகின் புனிதமான சமூகத்தை உருவாக்க, பரிசோதனை ஆராய்ச்சி நிலையமாக, ஆரோவில் திகழ்கிறது. சுற்றுச்சூழல், கல்வி, சுகாதாரம், மனித

Advertisement

குல ஒருமைப்பாடு உள்ளிட்ட எல்லா விஷயங்களுக்கும், உலக நாடுகளுக்கு ஆரோவில் முன்னோடியாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி, மத்திய அமைச்சர்பொன். ராதாகிருஷ்ணன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக அமைச்சர்கள் தங்கமணி, சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


அன்னையின் பக்தர்



பிரதமர் மோடி பேசும் போது, ''குஜராத்தில், நான் முதல்வராக இருந்த போது, அன்னை பக்தரான ஜோஷியின் ஆலோசனைகளை கேட்டேன். அவரது கல்வி சிந்தனைகளை செயல்படுத்தியுள்ளேன். அப்போது, அன்னை யின் மகிமையை தெரிந்து கொண்டேன். அந்த வகையில், நானும் அன்னையின் பக்தர் தான்,'' என்றார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கைப்புள்ள - nj,இந்தியா
26-பிப்-201811:22:23 IST Report Abuse

கைப்புள்ளசுத்தம், இதை பத்தி எல்லாம் பேசுறளவுக்கு எனக்கெல்லாம் ஒன்னும் தெரியாது. ஆனா ஒண்ணே ஒன்னு தெரியும், இந்து மதமே இல்லைங்கிறவனும், இந்துவா இருந்து கொண்டே இந்து மதத்தை பலிப்பவனும், நைட்டு போயி படுக்கிறப்போ ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா முருகா எண்ணிய காப்பாத்துன்னு சொல்லிட்டுதான் படுப்பானுவ. மற்றபடிக்கு இவர்கள் பேசும் எகத்தாளம் எல்லாம் சும்மா, மற்றவர்களை வெறுப்பேற்றவும் கெத்து காட்டவும்தான். போங்கடா டே, உங்கள மாறி எத்தினி பேர பார்த்து இருப்போம் நாங்கெல்லாம்.

Rate this:
karthik - Chennai,இந்தியா
26-பிப்-201811:18:45 IST Report Abuse

karthikஉண்மை. ஆன்மீகத்தின் பிறப்பிடம் இந்தியா.

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
26-பிப்-201808:37:27 IST Report Abuse

balakrishnanஇப்படி வரலாற்றுக்கு பொருந்தாத விஷயங்களை பேசி தான் ஒரு கிணற்று தவளை என்று அவ்வப்போது நிரூபித்து வருகிறார், ஆன்மீகம் பற்றி தொல் பழங்கால நாகரிகங்கள் அனைத்தும் உலகம் முழுதும் பல்வேறு வடிவங்களில் இருந்த வந்துள்ளது, ஆன்மீகத்தை வைத்தும், மதத்தை வைத்தும் நீண்ட நாள் வண்டி ஓட்ட முடியாது, மக்களின் எதிர்பார்ப்பு வேறு, அதை ஆன்மீகத்தை மதத்தை வைத்து மறைக்க முடியாது

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
26-பிப்-201804:20:05 IST Report Abuse

Kasimani Baskaranஅருமை...

Rate this:
25-பிப்-201823:38:14 IST Report Abuse

ஆப்புஇது போல விவரமில்லாத கருத்துக்களை சொல்லுவதைத் தவிர்க்க வேண்டும். இவரு என்ன நாட்டுக்கெல்லாம் போய் ஆன்மீகத்தை தேடுனாரு? நம்ம ஊருல இருக்கற ஜாதி, தீண்டாமை எல்லாம் ஆன்மீகமா? இந்து மதத்துக்கு முன்னே இருந்த சமண, புத்த மத ஆளுங்களை கொன்னதும், மதம் மாத்துனதும் ஆன்மீகமா? இவுரு மட்டுமில்ல, ஏராளமானவர்கள் இப்பிடித்தான்.

Rate this:
skv - Bangalore,இந்தியா
26-பிப்-201803:40:46 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>திரு ஆப்பு சொன்னாலும் சொல்லாட்டியும் மோடியின் கூற்று 100%கரெக்டுங்க . ஆன்மிகம் நம்ம நாட்டின் உயிர் நாடி என்பது தான் உண்மை ,திக போன்ற தீய சங்கதிகள் தான் தமிழ்நாட்டைன் அழிவுக்கு காரணமா இருக்குங்க , தனிப்பட்ட வாழ்க்கையே எல்லா இந்தியர்களும் 98 %இந்துக்கள் மட்டும் அல்ல இதர மதத்தினரும் (சேர்த்து)தம் வழிபாடுகளை மறப்பதே இல்லீங்க ஆன்மிகம் என்றால் சாமியார்களை மட்டும் எண்ணவேண்டாம் (பல சாமியார்கள் பொம்பளெபொறுக்கிகள் )அவர்களை மனிதர்களாவே எண்ணவேண்டாம் . இன்று நாம் எல்லோரும் நிம்மதியா வாழ அருளுவதே நாம் ஆண்டவனை நம்புவதுதான் ,புதுசா மதம் மாறியவனுகளேதான் நம்ம தெய்வங்களை கேவலமாபேசினா தான் பெருமை என்று நிக்குறானுக , எல்லா மதத்திலும் துவயவர்கள் இருக்காங்களே .மோடி சொல்லல்லே என்றாலும் நம்ம நாடு ஆண்மிய்கைநாடுதான்...

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
26-பிப்-201804:19:36 IST Report Abuse

Kasimani Baskaran"இது போல விவரமில்லாத கருத்துக்களை சொல்லுவதைத் தவிர்க்க வேண்டும்" - shame to you...

Rate this:
Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா
26-பிப்-201806:34:34 IST Report Abuse

Senthilsigamani.Tஅன்னைக்கும் கங்கைக்கும் ,தாய் மதத்திற்கும் நெறி வகுக்க எவருக்கும் உரிமையில்லை என்பது சொல் மொழி .ஹிந்து மதத்தில் குறைகள் உண்டு .ஆனால் அதனை காரணம் காட்டி அதை பழிக்க கூடாது .ஜாதிய ,தீண்டாமை வேறுபாடுகளுக்கு ஹிந்து மதம் காரணம் அல்ல .இதை தெளிவாக விளக்குகிறேன் ”இங்கு தமிழகத்தில் ஜாதி பிரிவினையை ஒழிப்போம் ஜாதிவேற்றுமையை குழி தோண்டி புதைப்போம் ,ஜாதி வேறுபாடுகளை களைவோம் ஜாதியில்லா சமுதாயத்தை மலரச்செய்வோம் ஜாதியற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவோம் என்ற வெற்று கோஷங்களை ,வெறுமையான சொற்றொடர்களை ,பொருளற்ற வாதங்களை சொல்லி தான் அரசியல் கட்சிகள் பிழைப்பு நிகழ்கின்றது .சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கட்சிகள் ,கருப்பு தாலிபான் திக திராவிட கட்சிகள் ( இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து ),திமுக ,அதிமுக ,மதிமுக ஆகிய கட்சிகள் (இந்த திராவிட கழிசடை கட்சிகளின் ஆரம்பநாளில் இருந்து ) ஹிந்து மதத்தில் உள்ள ஜாதிக்கொடுமைகளை எதிர்க்கிறோம் என்பார்கள் .திக வீரமணி மாதத்திற்கு ஒருமுறை ஜாதிய எதிர்ப்பு மாநாடு நடத்தி வழக்கம் போல அயோத்தி ராமர் கொடும்பாவிகள் எரிப்பார் .நானும் ஹிந்து மதத்தில் உள்ள ஜாதிய வேறுபாடுகளை வெறுக்கிறேன். ஆனால் இந்த அரசியல் கட்சிகள் செய்வது போலி ஜாதிய எதிர்ப்பு வாதங்கள் .இதை ஓரிரு விளக்கங்கள் மூலம் சொல்கிறேன் .கடந்த 1980 ம் ஆண்டு முதல் திராவிட கட்சிகளின் தலைவர்கள் ,அமைச்சர்கள் ,மாவட்டசெயலாளர்கள் ,வட்ட செயலாளர்கள் ,சட்டமன்ற ,நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,நகரசபை சேர்மன்கள் ,மாவட்ட ,வட்ட ,நகர ,கிராம பிரதிநிதிகள் தங்கள் குடும்பங்களில் கலப்பு திருமணங்கள் செய்திருந்தாலே - முக்கியமாக தலித் பிரிவுகளில் - பள்ளர் ,பறையர் ,சக்கிலியர் ,தேவேந்திர குல ,அருந்ததியர் ஆகிய பிரிவுகளில் பெண் எடுத்து /பெண் கொடுத்து கல்யாணங்கள் நடத்தியிருந்தாலே இந்நேரம் தமிழகத்தில் ஜாதிகள் இருந்திருக்காது . திராவிட கலி புருஷன் அவதாரமான கருணாநிதியே கனிமொழிக்கு அவரின் துணைவியாரின் ஜாதியில் தான் கல்யாணம் செய்து வைத்தார் .ஆம் ஜாதிக்கு எதிரானதாக காட்டிக்கொள்ளும் - ஹிந்து என்ற மதமே இல்லை என்று சொல்லும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மற்றும் தோழர்கள் கலப்பு திருமணங்கள் குறிப்பாக தாழ்த்தப்பட்ட ஜாதியில் செய்திருந்தாலே தமிழகத்தில் ஜாதியின் வேறுபாடுகள் குறைந்திருக்கும் .இல்லையே பெரியாரின் சமத்துவபுரங்கள் கட்டி அதில் ஊழல் செய்த கட்சிகள் ஜாதி பற்றி பேசுவதுதான் விந்தை .மேலும் தேர்தலில் ஜாதிபார்த்துதான் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்கின்றன .இதில் ஹிந்து மதம் எங்கு வந்தது .எந்த ஒரு ஹிந்து மத தலைவர்களும் ஜாதி பார்த்து வேட்பாளர் தேர்வை செய்தது இல்லை .செய்ய முடியாது .அது மட்டும் அல்ல ஆரிய வாதம் ,ஆரிய படையெடுப்பு ,என்றெல்லாம் சொல்லும் அரசியல் வியாதிகளின் auditors ,doctors ,lawyers ,company directors அனைவரும் ஆரியர்கள் தான் .தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல .அதனால் தான் திக வீரமணியின் கூட்டத்துக்கு தலித் தலைவராக முடியாது .கம்யூனிஸ்ட் கட்சிக்கு ,திமுக கட்சிகளுக்கு தலித் தலைவர்கள் தலைமை பொறுப்பை ஏற்க முடியாது .அதே நேரத்தில் நாட்டின் மூத்த குடிமகனாக ஜனாதிபதியாக தலித் சமுதாயத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த் அவர்களை தேர்வு செய்தது பிரதமர் மோடிஜி அரசு .அடங்க மறு அத்து மீறு இது ஒரு ஜாதிய கட்சியின் தாரக மந்திரம் அவருடன் கூட்டு சேர்ந்து ஜாதிய வேறுபாடுகளை ஒழிப்போம் என்பது நகை முரண் பிறழ் முரண் .மேலும் ஜாதிய பாகுபாடுகள் என்பது ஹிந்து மதத்திற்கு குறை தான் ஆனால் இழுக்கு அல்ல . ஆனால் முஸ்லீம் மதத்தில் நடப்பதென்ன ?. உலகத்தில் ஹிந்து மதத்தில் தான் ஜாதிய பிரிவுகள் உள்ளன என்பது முடிவிலி அறியாமை தத்துவத்தின் உச்சம் . முஸ்லீம் மதத்திலும் கலப்பு திருமணங்கள் உண்டு .முஸ்லீம் மதத்தில் லெப்பை, தக்கினி முஸ்லிம், மரைக்காயர், ராவுத்தர், மாப்பிள்ளை, பட்டாணி, (பத்ஹான்கான்) காக்கா, சேட், சையது, ஷேக், பீர், தாவூத், அன்சாரி, நவாப் உள்ளிட்ட முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியலைச் சேர்ந்தவர்கள். இதை மறுக்க முடியுமா உங்களால் ? கடந்த 400 வருடங்களில் இந்தியாவில் ஹிந்து மத ஜாதி சண்டையால் /சைவ ,வைணவ பிரிவுகளினால் ஏற்பட்ட சச்சரவால் உயிரிழந்தவர்கள் நூற்றுக்கும் குறைவே. ஆம் நூற்றுக்கும் - 100 குறைவே .ஆனால் முஸ்லீம் நாடுகளில் முஸ்லீம் பிரிவுகளான - சைவ /வைணவ மார்க்க பிரிவுக்கு நிகரான - ஜாதிக்கு நிகரான - குர்து, யாஸிதி,சுஃபி ,குர்ஷித் ,ஷியா,சன்னி முஸ்லீம் பிரிவினரிடையே நடந்த கோரமான சண்டைகளில் கடந்த 40 வருடங்களில் 7.4 லட்சம் பேர் அதாவது 7,40,000 பேர் இறந்துள்ளனர் ஈரான் -ஈராக் யுத்தம் என யாவும் இதன் பிரிவுகளுக்கு இடையே நடக்கும் யுத்தம் தான் .அதை ஒப்பிட்டு பார்த்தால் இந்தியா எவ்வளவோ பரவாயில்லை. வேற்றுமையில் ஒற்றுமை காண்பது ஹிந்து மதம் தான் .அது தான் இந்தியாவின் அடையாளமும் கூட.ஆதலால் இனி சிறுபான்மை இனத்தவர் மற்றும் போலிமதச்சார்பின்மை வாதிகள் ஜாதியை காரணம் காட்டி ஹிந்து மதத்தை பழிக்க வேண்டாம் . உலக முஸ்லீம் நாடுகள் ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் ஷியா,சன்னி பிரிவு படுகொலைகளை பார்த்தாலே தெரியும் .போன மாதம் எகிப்த்தில் மசூதியில் குண்டு வெடித்து அப்பாவி முஸ்லிம்கள் நானூறு பேர் இறந்தனர் ? /அதற்க்கு காரணம் முஸ்லீம் ஜாதிய பிரிவினைவாதிகள் .ஆனால் ஜாதி பிரிவினையால் இந்தியாவில் இது போன்று ஒரு போதும் நடக்காது இதை ஹிந்துக்கள் புரிந்து கொள்ள கடவுள் அருளாசி வழங்கட்டும் . ஆங்கிலேயர் நம்மை ஆண்ட ஆட்சிக்காலத்தின் சம காலங்களில் அநேக ஆப்பிரிக்கா நாடுகளில் கென்யா உட்பட கிறிஸ்துவம் வெகுவாக ஊன்றியது . தற்போது 150 நாடுகளில் கிருத்துவம் உள்ளது -ஆட்சி அதிகார மதமாக ஆனால் இந்தியாவில் அது போன்று நிகழாதற்க்கு காரணம் ஜாதிய பாகுபாடுகள் தான் .ஆம் இதனை ஆங்கிலேயர்களே தங்கள் பிரிட்டிஷ் மகாராணிக்கு எழுதி தெரியப்படுத்திய ஆவணங்களை கூகிளில் படிக்கவும் . கடேசியாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும் சரி ,பழனி முருகன் கோவில் ,ஸ்ரீரங்கம் பெருமாள் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலம் கோவில் ,திருச்செந்தூர் முருகன் கோவில் ஆகிய அனைத்து ஹிந்து கோவில்களிலும் பிராமிணனும் தலித்தும் ஒன்றாக நின்று சாமி தரிசனம் செய்ய முடியும் கோவிலில் வழிபாடு செய்ய முடியும் .அதாவது சாதிபாகுபாடுகள் கிடையாது அறுபத்தி நாயன்மார்களில் மீனவர் ,வணிகர் வேளாளர் ,கடையர் ,வேடர் ஏகாலியர், புலையர் ,குயவர் ,இடையர் ,சாலியர் ஆகிய அனைத்து குலம்/ஜாதிய பிரிவுகளை சேர்ந்தவர்கள் உள்ளனர் (தற்போது SC ,ST BC ,MBC பிரிவுகளுக்கு நிகர் .அவர்களின் சிலைகள் அனைத்து சைவ கோவில்களிலும் ( கொடிமரம் உள்ள ) உள்ளது .சிவனுக்கு நிகராக அவர்களுக்கு குருபூஜைகள் உண்டு .இதை போன்று அடுத்தமதத்தில் எதிர்பார்க்கமுடியுமா ? மதமாற்ற பிரச்சாரங்களுக்கு மட்டும் தான் ஹிந்து மதத்தில் ஜாதிப்பிரிவினை உள்ளது என்ற பிறழ் முரண் வாதம் உதவும் .மற்றபடி அது பொருளின்மை வாதங்கள் தான் இந்தியாவில் கிருஸ்துவர்கள் தீண்டாமையை போற்றுகிறார்கள்.. இந்திய சர்ச்சுகளில் தீண்டாமை உள்ளது . அவ்வளவு ஏன் கிருஸ்துவ மதத்திலும் ஜாதிகள் உண்டு ஹிந்து மனு தர்மம் எங்களை சமமாக நடத்தவில்லை என்று கூறி ,ஹிந்து தெய்வங்களை பழித்து, இந்த ஹிந்து தலித்துக்கள் கிருஸ்துவ மதம் மாறுகிறார்கள் .ஆனால் அங்கும் ஜாதி பிரச்சனை தான் .பைபிள் சொல்லாத ஜாதிகள் - கொடுமை கொடுமை இதுதான் கொடுமை தலித் கிருஸ்துவர்கள் ,கிருஸ்துவ நாடார்களுடன் /கிருஸ்துவ வன்னியர்களுடன் /கிருஸ்துவ செட்டியார்களுடன் /கிருஸ்துவ மறவர்களுடன்/கிருஸ்துவ பிள்ளைமார்களுடன் திருமண சம்பந்தம் வைக்க முடியாது முடியவே முடியாது - அப்படி சம்பந்தம் செய்தால் கிருஸ்துவ கலப்பு திருமணங்கள் தான் .அதை எதிர்க்க கிருஸ்துவ மதத்திலும் கௌரவ கொலைகள் உண்டு கிருஸ்துவ நாடார்கள் /கிருஸ்துவ வன்னியர்கள் பெரும்பான்மையானவராக உள்ள சர்ச்சுகளில் தலித் கிருஸ்துவர்கள் உள்ள போகவே முடியாது தமிழகத்தில் எத்தனை கிருஸ்துவ மறை மாவட்டங்களின் தலைவர்கள் தலித் கிருஸ்துவர்கள் என்று கணக்கு பார்த்தால் தெரியும் உண்மை ..தலித் கிருஸ்துவர்கள் கிருஸ்துவ திருச்சபைகளில் தங்களுக்குரிய பிரதிநிதித்துவம் கேட்டு வீதிகளில் தினமும் போராடுகிறார்கள் ..அவ்வளவு ஏன் திருச்சி மேலபுதூர் கிருஸ்துவ கல்லறையில் தீண்டாமை தடுப்பு சுவர் - ஆம் தலித் கிருஸ்துவர்களுக்காக - ஆம் வாழும் போது தான் இந்த அவலம் என்றால் கிறிஸ்துவுக்குள் மரித்தாலும் விடாத ஜாதி வெறி. தீண்டாமை வெறி அது மட்டும் அல்ல இம்மானுவேல் சர்ச் - ஆம் இம்மானுவேல் சர்ச் ஆம் இம்மானுவேல் சர்ச் தான் தலித் கிருஸ்துவர்களுக்காக மட்டும் அந்த சர்ச்சுகளில் ஹிந்துக்களின் கருப்பசாமி பாடல்கள் மெட்டுக்களில் (அங்கே இடி முழங்குதே -) கர்த்தர் பாடல்கள் ஒலிக்கின்றன இதற்கு ஹிந்து மனு சாஸ்திரங்கள் காரணமன்று. .செங்கல்பட்டு அருகே உள்ள தச்சூரில் 20 ஆண்டுகாலமாக கத்தோலிக்க சர்ச் மூடப்பட்டு கிடக்கிறது . வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் இருக்கிறது , தலித் கிருஸ்துவர்கள் சர்ச்சுக்குள்ளே வரக் கூடாது என்று வன்னியர், ரெட்டியார் கிருஸ்துவர்கள் எதிர்கிறார்கள். இந்த பிரச்சினையில் முன்னின்று போராடிய தலித் - இனத்தை சேர்ந்த கிருஸ்துவ இளைஞர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மிக கொடூரமான /கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். தனிக் கல்லறை வழக்கம் கிருஸ்துவர்களிடமும் இருக்கிறது ..கிராமங்களில் தலித் கிருஸ்துவர்கள் சேரிக்குள் தான் வாழ வேண்டும் , சாதி கிருஸ்துவர்களோடு ஊர்த்தெருவில் குடியிருக்க முடியாது. ஆதலால் ஜாதிய வேறுபாடுகளை வைத்து ஹிந்து மதத்தை இழிவு படுத்த /சிறுமைப்படுத்த/ஏளனங்கள் செய்ய /அவமானங்கள் செய்ய /நக்கல்கள் /நையாண்டிகள் செய்ய மதம் மாறிய ஹிந்துக்கள் முயற்சிக்க வேண்டாம்....

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
26-பிப்-201807:24:22 IST Report Abuse

ஆரூர் ரங்இன்றும் பாஜக கொள்கைப்படி இந்தியாவில் தோன்றிய அனைத்து மதங்களுமே இந்துத்துவத்தின் பகுதிகள்தான் பௌத்தம் இந்துமதத்திற்கு முன்னால் இருந்தது என யார் உங்களுக்கு சொன்னார் ? தனது காலத்திலிருந்த சனாதன மதத்தில் அவருக்கு ஏற்புடையதல்லாத கொள்கைகளை எதிர்த்துதான் புத்தர் வேறு சீர்திருத்த வழி காட்டினார். அவர் எதிர்த்து பலியிடுதலையும் விக்கிரக வழிபாடு மற்றும் பூஜைகளை ஆனால் புத்தகோவில்களில் இப்பொது மூன்றுமே நடக்கின்றன . அசைவம் சாப்பிடாத பவுத்தர்களேயில்லை .இரண்டாவது சமணம் அவர்களே தங்கள் சனாதனமதத்தைவிட பழையது எனக்கூறுவதில்லை. இந்து வாழ்க்கைமுறையில் 90% அவர்களிடமுண்டு (அமித்ஷா கூட ஒரு சமணரே) .இந்துக்கடவுளரின் எத்தனையோ சாதியினருண்டே. ஏதாவதொரு பிராமண சாமியைக்கண்டதுண்டா? வேதமோ ராமாயணமோ மஹாபாரதமோ எல்லாமே சாதாரணர்கள் எழுதியது என்பதற்காக அவற்றை மேலசாதியினர் போற்றுகின்றனரா அல்லது தீண்டத்தகாததாகக் கருதுகின்றனரா? தீண்டாமை என்பது பிற்காலத்தில் சுயநலவாதிகள் திணித்ததுதான் அதற்கும் மதத்துக்கும் தொடர்பில்லை...

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
26-பிப்-201808:47:45 IST Report Abuse

balakrishnanஇந்தியாவில் மதம் என்பதே இல்லை, இந்தியா ஒரு ஒன்றுபட்ட நாடாக என்றுமே இருந்ததில்லை, இங்கே பல்வேறு விதமான கடவுள் வழிபாடுகள் நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் மக்களால் வழிபட்டு வரப்படுகிறது, இதற்கு யாரும் சொந்தம் கொண்டாடமுடியாது,...

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
26-பிப்-201808:49:53 IST Report Abuse

balakrishnanநமது சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முன்னாள் பல்வேறு நாகரிகங்கள் உலகம் முழுதும் இருந்துள்ளன, அங்கும் ஆன்மீகம் இருந்துள்ளது, ஆன்மீகத்துக்கு யாரும் எந்த ஒரு நாடும் சொந்தம் கொண்டாடமுடியாது, அது ஒரு இயற்கை,...

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
26-பிப்-201809:01:51 IST Report Abuse

K.Sugavanamஹிந்து மதம் என ஒன்று இல்லவே இல்லை என எல்லோரும் சொல்லும்போது இந்த கருத்து தேவையா...

Rate this:
Prabhakaran - Delhi,இந்தியா
26-பிப்-201809:16:48 IST Report Abuse

Prabhakaranதீண்டாமை இந்து மதத்தில் உள்ளது என்பதை ஒப்பு கொள்வதே தங்களின் யதார்த்தத்தை காட்டுகிறது. தீண்டாமை பிற்காலத்தில் சுயநலவாதிகளால் திணிக்கப்பட்டதாக இருக்கலாம். அப்படியென்றால் அதற்க்கு முன்பு வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு பின்னர் திணிக்கப்பட்ட தீடாமையை இந்து மதத்திலிருந்து அப்புறப்படுத்த எத்தனை பேர் தற்பொழுது தயாராக உள்ளனர்? தற்போதைய இந்து மதம் 90% சுயநலவாதிகளால் நிறைந்துள்ளது. அவர்கள் தற்போதைய இந்து மனு நீதி அளிக்கும் உயர்ந்த சாதி எனும் சமூக அந்தஸ்தை இழக்க விரும்பவில்லை. தங்களின் கீழ் அடிமைகளை நிலை நிறுத்துவதில் விருப்பம்கொண்டுள்ளனர்....

Rate this:
Sandru - Chennai,இந்தியா
26-பிப்-201809:44:17 IST Report Abuse

Sandruரஜினி சொல்லுவதும் மோடி சொல்லுவதும் ஒரே ஆன்மீகம்தான். இருவரும் அரசியல் பங்காளிகள்....

Rate this:
karupanasamy - chennai,இந்தியா
26-பிப்-201810:52:11 IST Report Abuse

karupanasamyவேதத்தின் எந்த ஒரு இடத்திலும் சாதி என்றோ தீண்டாமை என்றோ எதுவும் இல்லை. ஒழுக்கம் கட்டுப்பாடு நன்னெறி இவை தான் வேதத்தின் கோட்பாடு. இவை எதுவுமே இல்லாத பெங்களூரு ராமசாமி நாயக்கனும் அவனது அடியாட்களும் திட்டமிட்டு பரப்பிய பரப்பும் செய்திதான் ரிக்வேதத்தின் புருஷ சுக்தம் பற்றிய பொய் பரப்புரையே சாதி அமைப்பு. நான் யாருக்கும் தாழ்ந்தவனும் இல்லை உயர்ந்தவனும் இல்லை இது தான் சனாதனம்....

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement