புதுச்சேரி:''பழங்காலம் தொட்டே, ஆன்மிகத்தின் பிறப்பிடம் இந்தியா தான்,'' என, ஆரோவில் பொன் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
புதுச்சேரி அருகே, ஆரோவில் சர்வதேச நகரம் உதயமாகி, 50 ஆண்டு கள் நிறைவடைவதை முன்னிட்டு, நேற்று பொன் விழா கொண்டாடப் பட்டது.
பொன்விழா
ஆரோவில் பவுண்டேஷன் சேர்மன் கரண்சிங் வரவேற்றார். பொன் விழா ஆண்டு சிறப்பு தபால் தலை மற்றும் ஆரோவில் கட்டட கலை புத்தகத்தை வெளியிட்டு, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:அரவிந்தரின் பார்வை தான், இந்தியாவின் ஆன்மிக தலைமையை பறைசாற்றுவதாக இன்றைக்கும் உள்ளது. அரவிந்தர், மனிதனுக்கு என்ன தேவையோ, அதை நடைமுறையில் ஆராய்ந்து
செயல்படுத்தி உள்ளார். அவர்,
தத்துவவாதி, கவிஞர் என, பல முகங்கள் கொண்டவர். அதை நாட்டிற்கும்,
சமூகத்திற்கும் அர்ப்பணித்துள்ளார்.
கடந்த, 50 ஆண்டுகளாக சமூகம், கலாசாரம்,
ஆன்மிகம், பொருளாதாரம் மற்றும் புதுமைக்கு, ஆரோவில் அடித்தளமாக இருந்து
வருகிறது.பழங்காலம்தொட்டே, ஆன்மிகத்தின் பிறப்பிடம் இந்தியா தான். இந்தியாவில் தான், பல மதங்கள் தோன்றின.
இந்தியாவின் ஆன்மிகத்தை அங்கீகரித்து தான், ஜூன் 21ல், உலக யோகா தினம் அறிவிக்கப்பட்டது. ஆரோவில் சாசனத்தை, ஸ்ரீ அன்னை தன் கைப்பட பிரெஞ்சு மொழியில் எழுதியுள்ளார். ஆரோவில்லில் வசிக்க, ஒருவர் தெய்வீக உணர்வுக்கு, விருப்பத் துடன் தொண்டு செய்பவராக இருக்க வேண்டும்.
இந்தியா, உலகத்திற்கு தலைமை தாங்க வேண்டும். அதற்கு அரவிந்தரின் கருத்துகள் தான் வழி காட்டியாக இருக்கிறது. உலகின் ஆன்மிக தேடல்களுக்கான மையமாக, ஆரோவில்லை உருவாக்க வேண்டும் என்பதேஸ்ரீ அன்னையின் எண்ணம்ஆகும்.
முன்னோடி
உலகின்
புனிதமான சமூகத்தை உருவாக்க, பரிசோதனை ஆராய்ச்சி நிலையமாக, ஆரோவில் திகழ்கிறது. சுற்றுச்சூழல், கல்வி, சுகாதாரம், மனித
குல ஒருமைப்பாடு
உள்ளிட்ட எல்லா விஷயங்களுக்கும், உலக நாடுகளுக்கு ஆரோவில் முன்னோடியாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி, மத்திய அமைச்சர்பொன். ராதாகிருஷ்ணன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக அமைச்சர்கள் தங்கமணி, சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அன்னையின் பக்தர்
பிரதமர் மோடி பேசும் போது, ''குஜராத்தில், நான் முதல்வராக இருந்த போது, அன்னை பக்தரான ஜோஷியின் ஆலோசனைகளை கேட்டேன். அவரது கல்வி சிந்தனைகளை செயல்படுத்தியுள்ளேன். அப்போது, அன்னை யின் மகிமையை தெரிந்து கொண்டேன். அந்த வகையில், நானும் அன்னையின் பக்தர் தான்,'' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (1)
Reply