புதுடில்லி:அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்யும் மோசடியால் ஏற்படும் இழப்பைத் தடுக்க, காப்பீடு தொகையை அதிகரிக்க, வங்கிகள் திட்டமிட்டுள்ளன.
ஆலோசனை
சமீபத்தில்,பிரபல வைர வியாபாரி,நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் உதவி யுடன், 11,400 கோடி ரூபாய் மோசடி செய்தது அம்பலமானது. அதைதொடர்ந்து, ஓரியண்டல் வங்கியில், 390 கோடி ரூபாய் மோசடி, 'ரோட்டோமேக்' பேனா நிறுவன உரிமையாளர் விக்ரம் கோத்தாரி, 3,695 கோடி ரூபாய் கடன்
மோசடி, என, பல்வேறு மோசடிகள் வெளிச்சத்துக்கு வரத் துவங்கியுள்ளன.
இதில், வங்கி அதிகாரிகளே மோசடியில் ஈடுபட்டு உள்ளதால், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பைஈடு செய்வது குறித்து வங்கிகள் ஆலோசித்து வருகின்றன. தற்போது வங்கிகளில் உள்ள இழப்பீட்டு கொள்கையில் உள்ளதைவிட, கூடுதலாக இழப்பீடு கிடைக்கும் காப்பீட்டு திட்டத் தில் சேருவது குறித்து வங்கிகள் ஆலோசித்து வருகின்றன.
தற்போதைய வங்கிகளின் இழப்பீட்டு கொள்கை படி, ஊழியர்களால் செய்யப்படும், இரண்டு கோடி ரூபாய் வரையிலான மோசடியில், வங்கிக்கு இழப்பீடு கிடைக்கும்.
இழப்பீடு
ஆனால்,
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஊழியர்கள் துணையுடன் நடந்த மோசடியான,ரூ. 11,400 கோடி உடன் ஒப்பிடுகையில், இந்த இழப்பீடு மிகவும்
குறைவுஎஸ்.பி.ஐ.,
எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில், 2016 - 17ல், 837 வழக்குகளில், 2,424
கோடி ரூபாய்மோசடி நடந்துள்ளது. அதில், 278 வழக்கு களில், 2,360 கோடி ரூபாய் மோசடி, கடன் மோசடி.மோசடிகளின் அளவு அதிகரித்து உள்ள நிலையில், வங்கிகளின் இழப்பை குறைப்பது குறித்து சமீபத்தில் விவாதிக்கப் பட்டது.
அதே நேரத்தில், திட்டமிட்டு கடனை செலுத் தாதது, பல்வேறு வங்கிகளில் செய்த மோசடி போன்றவை தனியாக கையாளப்படும்; அவை இந்த இழப்பீட்டு கொள்கையில் வராது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து