மயிலை யாரும் மறக்க முடியாது : சிவகுமார் | ஈடு செய்ய முடியாத இழப்பு : ஸ்ரீதேவிக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் | ஸ்ரீதேவி மறைவு : ஹிந்தி திரையுலகம் அதிர்ச்சியுடன் கூடிய இரங்கல் | கனவு மடிந்துவிட்டது : ஸ்ரீதேவியின் மறைவுக்கு இளம் நடிகைகள் இரங்கல் | இந்தியாவின் திறமையான நடிகை ஸ்ரீதேவி : இளையராஜா | மூன்றாம் பிறை பாடல் தான் பாட தோன்றுகிறது : ஸ்ரீதேவி குறித்து கமல் உருக்கம் | சினிமா ஒரு சாதனையாளரை இழந்துவிட்டது : ரஜினி | ஸ்ரீதேவி பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி வீடியோ | ஸ்ரீதேவி திடீர் மரணம்: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் | ஏதோ தப்பா படுது- ஸ்ரீதேவி மறைவுக்கு முன் அமிதாப் ட்வீட் |
நடிகை ஸ்ரீதேவி மறைவிற்கு நடிகர் ரஜினி தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, நடிகை ஸ்ரீதேவியின் மறைவு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. நெருங்கிய நண்பரை இழந்தது வருத்தம் அளிக்கிறது. இயக்குநர் கூறுவதை கேட்டுக்கொண்டு கேமரா முன் மின்னல் வேகத்தில் நடிப்பை வெளிப்படுத்தியவர். இந்திய திரையுலகிற்கே அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. 3 மாதங்களுக்கு முன் தான் அவரை சந்தித்தேன். நல்ல நண்பரை இழந்த வேதனையில் இருக்கிறேன். திரையுலகம் ஒரு சாதனையாளரை இழந்து விட்டது என்றார்.