மயிலை யாரும் மறக்க முடியாது : சிவகுமார் | ஈடு செய்ய முடியாத இழப்பு : ஸ்ரீதேவிக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் | ஸ்ரீதேவி மறைவு : ஹிந்தி திரையுலகம் அதிர்ச்சியுடன் கூடிய இரங்கல் | கனவு மடிந்துவிட்டது : ஸ்ரீதேவியின் மறைவுக்கு இளம் நடிகைகள் இரங்கல் | இந்தியாவின் திறமையான நடிகை ஸ்ரீதேவி : இளையராஜா | மூன்றாம் பிறை பாடல் தான் பாட தோன்றுகிறது : ஸ்ரீதேவி குறித்து கமல் உருக்கம் | சினிமா ஒரு சாதனையாளரை இழந்துவிட்டது : ரஜினி | ஸ்ரீதேவி பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி வீடியோ | ஸ்ரீதேவி திடீர் மரணம்: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் | ஏதோ தப்பா படுது- ஸ்ரீதேவி மறைவுக்கு முன் அமிதாப் ட்வீட் |
தென்னிந்தியாவில் மட்டுமல்லாது ஏராளமான ஹிந்தி படங்களிலும் நடத்துள்ளார் ஸ்ரீதேவி. அவரின் மரணம் பாலிவுட் பிரபலங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. பல பிரபலங்களுக்கு அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீதேவியின் ரசிகர்களுக்கு இன்றைய தினம் கருப்பு நாள் என நடிகை ப்ரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
மிகவும் அதிர்ச்சி. ஸ்ரீதேவி மரணித்துவிட்டார் என்று என்னால் நம்பவே முடியவில்லை. மிகவும் வருத்தமான விஷயம். அற்புதமான, திறமையா நடிகை. இந்திய சினிமாவின் குயின். நல்ல நண்பர். அவர் உடன் நடித்த நாட்கள் என்றும் நினைவில் என கூறியுள்ளார் நடிகர் அனுபம் கெர்.
ஸ்ரீதேவி இறந்துவிட்டாரா? யாராவது எழுந்து, இது கெட்ட கனவு என்று சொல்லுங்கள் என ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.
நான் மிகவும் அதிர்ச்சியானேன். சொல்ல வார்த்தைகள் இல்லை. அவரின் குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என நடிகை அனுஷ்கா சர்மா கூறியுள்ளார்.
ஹிந்தி சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவருடைய படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். எனது ஆல்டைம் பேவரிட் ஹீரோயின் அவர் தான். அவரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் என ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.
மிகவும் அதிர்ச்சியான செய்தி. சொல்ல வார்த்தைகள் இல்லை. ஸ்ரீதேவியின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் கூறியுள்ளார்.
கடும் மாரடைப்பால் ஸ்ரீதேவி மரண செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியானேன். என்னால் கண்ணீரை நிறுத்த முடியவில்லை என நடிகை சுஷ்மிதா சென் கூறியுள்ளார்.
தூங்கி எழுந்ததும் இப்படியொரு செய்தியை கேட்டு அதிர்ச்சியானேன். மிகவும் வருத்தமாக உள்ளது. போனி கபூர் மற்றும் அவரது மகள்களுக்கு ஆழ்ந்த வருத்தங்கள் என மூத்த நடிகர் ரிஷி கபூர் கூறியுள்ளார்.
ஸ்ரீதேவி மறைந்துவிட்டார். ஒரு சகாப்தம் முடிவுற்றது. ஒரு அழகிய கதை முடிந்தது. அவருடன் இருந்த தருணங்கள் என்றும் நினைவில் நீங்காதவை என சேகர் கபூர் கூறியுள்ளார்.
எனக்கு எப்போதும் பிடித்தமான நடிகையாக இருக்கும் ஸ்ரீதேவி இறப்பு அதிர்ச்சியாக உள்ளது. கடவுள் அவரது குடும்பத்தாருக்கு தெம்பை கொடுக்கட்டும். அவரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன் என நடிகை ப்ரீத்தி ஜிந்தா கூறியுள்ளார்.
அதிர்ச்சியில் உறைந்து போனேன். இன்னும் அவரின் சிரித்த முகம் நினைவில் உள்ளது. அவர் ஒரு பள்ளி போன்றவர். அவரிடம் படிக்க நிறைய விஷயங்கள் உள்ளது. ஸ்ரீதேவியின் மரணம் நம்ப முடியவில்லை. பெரிய இழப்பு இது என நடிகை கஜோல் கூறியுள்ளார்.
ஸ்ரீதேவியின் மறைவு துரதிஷ்டவசமானது. வார்த்தைகள் வரவில்லை. ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் என அக்ஷ்ய் குமார் கூறியுள்ளார்.
இதுபோன்று பல பிரபலங்கள் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.