காவிரி மேலாண்மை வாரியத்தை, அடுத்த மாதம், 15ம் தேதிக்குள் அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, நீண்ட நாட்களாக உள்ள இந்த பிரச்னைக்கு, விடிவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு, ஆண்டு தோறும், 192 டி.எம்.சி., நீரை,கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஆனால், காவிரி பிரச்னை தொடர்பான வழக்கில், சமீபத்தில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தமிழகத்திற்கான, தண்ணீரின் அளவு, 177.25 டி.எம்.சி.,யாக குறைக்கப்பட்டது. அதே நேரத்தில், 'காவிரி மேலாண்மை வாரியத்தை, ஆறு வாரத்திற்குள் அமைக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
'உச்ச நீதிமன்றத்தால் குறைக்கப்பட்ட, 14.75 டி.எம்.சி., நீரை பெற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியத்தை காலம் கடத்தாமல், மத்திய அரசு அமைக்க வேண்டும்' என, விவசாயிகள் கூறி வருகின்றனர். முதல்வர் பழனிசாமி தலைமை யில் நடந்த, அனைத்து கட்சி கூட்டத்திலும், இதே கருத்து வலியுறுத்தப்பட்டது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக, முதல்வர் தலைமையில், அனைத்து கட்சி பிரதிநிதிகளும் டில்லி சென்று, பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, பிரதமரின் அனுமதியை பெற, அரசு தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம், 15ம் தேதிக்குள், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துஉள்ளது.
இதுகுறித்த நம்பகமான தகவல், மத்திய அரசு அதிகாரிகளிடம் இருந்து, காவிரி தொழில்நுட்ப பிரிவினருக்கு கிடைத்து உள்ளது. காவிரி வழக்கில், தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட முடியாமல் ஏமாற்றம் அடைந்த, காவிரி
தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள், இதனால், ஆறுதல் அடைந்து உள்ளனர்.
தங்கமணி சந்திப்பு
இதற்கிடையே, கவர்னர் மாளிகையில்
தங்கிய, பிரதமர் மோடியை, தமிழக அமைச்சர், தங்கமணி, நேற்று முன்தினம் இரவு,
தனியாக சந்தித்து பேசினார். அப்போது அவர், காவிரி உள்ளிட்ட பல விஷயங்கள்
குறித்து பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து,அ.தி.மு.க., வட்டாரங்கள்
கூறியதாவது:பிரதமர் மோடியை சந்திக்க, முதல்வர் பழனிசாமிக்கு மட்டும் அனுமதி தரப்பட்ட தகவல் வெளியானது. ஆனால், முதல்வர் சந்திக்கவில்லை
.
கடைசி நேரத்தில், மின் துறை அமைச்சர், தங்கமணி, பிரதமரை சந்தித்தார். ஏற்கனவே, டில்லியில், பிரதமர் மோடியை, மூன்று முறை சந்தித்து பேசியவர் என்பதாலும், தனக்கு நம்பிக்கையானவர் என்பதாலும், தங்க மணியை, முதல்வர் அனுப்பியுள்ளார். பிரதமருடனான, தங்கமணியின் சந்திப்பு, 10 நிமிடங்கள் நீடித்தது. அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, அனைத்து கட்சியினரும், பிரதமரை சந்தித்து அழுத்தம் கொடுப்பது என, அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து, பிரதமரிடம் விவரித்தார்.
கலெக்டர்கள் மாநாடு முடிந்த பின், முதல்வர் தலைமையில், கட்சி தலைவர்கள் தங்களை சந்திக்க, மார்ச், 8, 9 ஆகிய தேதிகளில், நேரம் ஒதுக்க வேண்டும் என, அனுமதி கேட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு, மே மாதம் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்தும், 'பிரதமர் கூறியதால், மீண்டும் இணைந்தேன்' என, அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியது குறித்தும் பேச்சு நடந்துள்ளது.
அப்போது, தமிழக அமைச்சரவையில், சில முக்கிய முடிவுகளைஎடுக்கும்படி, முதல்வர் பழனிசாமிக்கு, பிரதமர் பரிந்துரை செய்துள்ளார். அது, எந்த மாதிரியான முடிவு என்பது, ரகசியமாக
வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
என்ன பலன்?
காவிரி
மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதன் மூலம், பல பிரச்னைகளுக்கு தீர்வு
ஏற்படும்.
குறிப்பாக, நதி நீரில் உரிய பங்கு மாநிலங்களுக்கு கிடைப்பதை
உறுதி செய்வது, பருவமழை பொய்க்கும்போது, எந்த அளவுக்கு பங்கீட்டை மாற்றிக் கொள்வது போன்றவற்றை மேலாண்மை வாரியம் முடிவு செய்யும்.
கனிமொழிக்கு முக்கியத்துவம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க, அனைத்து கட்சி தலைவர்களையும் டில்லி அழைத்து செல்வதாக, முதல்வர் பழனிசாமி உறுதியளித்துள்ளார். சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தபோது, ஒவ்வொரு கட்சி தரப்பிலும், இரண்டு பேர் அழைக்கப் பட்டு இருந்தனர்.
டில்லி பயணத்தின்போது, ஒரு கட்சிக்கு ஒருவரை அழைத்து செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பயணத்தின்போது, டில்லி செல்வதை தவிர்த்துவிட்டு, தி.மு.க., தரப்பில் கனிமொழியை அனுப்ப, ஸ்டாலின் திட்ட மிட்டுள்ளார். தமிழக காங்., தலைவர்கள், இந்த பயணத்தில் இடம்பெறமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததை காரணம் காட்டி, கர்நாடக அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. தற்போது, ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இனியும் காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். டில்லியில் பிரதமரை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு, விவசாயிகளையும் அழைத்து செல்லவேண்டும்.
விஸ்வநாதன், தலைவர், ஏரி மற்றும்
ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (21)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply