வட சென்னை கதை என்ன? | டுவீட் போட்டு வம்பில் மாட்டிக் கொண்ட கஸ்தூரி | கார்த்திக் சுப்பாராஜ் தரும் உத்தரவாதம் | ஆக்ஷ்னை விரும்பும் காஜல் அகர்வால் | ஸ்ரீதேவியும் ஐ.வி.சசியும் 'அ ஆ' வரிசை படங்களும்..! | கதாநாயகியை அறைந்த குற்ற உணர்ச்சியால் தவித்த ஜெயசூர்யா | குளியல் தொட்டியில் மூழ்கி இறந்தார் : ஸ்ரீதேவி மரணம் குறித்து புதிய தகவல் | ஸ்ரீதேவி குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல செல்கிறேன் : கமல் | மோகன்லாலுக்காக போடப்பட்ட 25 ஸ்கெட்ச் | மொழியை நேசியுங்கள் : மலையாளத்தில் டப்பிங் பேசிய சித்தார்த்..! |
ஸ்ரீதேவியின் மறைவிற்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது...
இந்தியாவில் திறமையான நடிகையாக வாழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் நடித்த பல படங்களுக்கு இசை அமைத்துள்ளேன். அவர் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோதே எனக்கு தெரியும். அவர் பாடல்கள், வசனங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று மிக கவனமாக செயல்படுவார்.
கமலும், ஸ்ரீதேவியும் இணைந்து பல ரிக்கார்டிங்குகளில் என்னுடன் பணியாற்றியுள்ளனர். அவருக்கும் நான் பல விஷயங்களை கற்று கொடுத்துள்ளேன். கிடார், உள்ளிட்ட எலக்ட்ரானிக் கருவிகள் வாசித்து கொண்டிருந்தபோது வாகினி , விஜயா ரிக்கார்டிங் தியேட்டரில் ஜிகே வெங்கடேசோடு இருந்தபோது 2 குழந்தை நட்சத்திரங்கள் வந்தன. அதில் ஒருவர் ஸ்ரீதேவி. அப்போதில் இருந்தே அவரது திறமை எனக்கு தெரியும்.
லவ குசாவில் ஸ்ரீ தேவி நடித்து கொண்டிருந்தார். அவரது திறைமையை அனைவரும் அறிவர். எந்த பாத்திரத்திலும் ஒன்றி, கலை அம்சங்களுடன் பல விதங்களில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் திறமையை பாலச்சந்தர், பாலுமகேந்திரா ஆகியோர் வெளிக்கொண்டு வந்ததனர் என்று சொன்னாலும், உள்ளே இருந்தால் தான் வெளியே வரும். அவரது மறைவு சினிமா உலகத்திற்கு ஒரு பேரிழப்பு ஆகும்.
இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்.