ஸ்ரீதேவி திடீர் மரணம்: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் | ஏதோ தப்பா படுது- ஸ்ரீதேவி மறைவுக்கு முன் அமிதாப் ட்வீட் | ஐந்து வருடங்கள் ஆறப்பட்ட கதை | ரித்திகா சிங் நடிக்க மறுத்த படத்தில் நிகிஷா பட்டேல் | கெட்டப்பை மாற்றும் சிவகார்த்திகேயன் | அஜீத்தின் விசுவாசம், வீரம் படத்தின் இரண்டாம் பாகமா? | கரு பட யூனிட்டை வியக்க வைத்த சாய் பல்லவி | மகாநதியில் நடிக்க மறுத்த அனுஷ்கா | பிகினிக்கு மறுப்பு சொன்ன அனுபமா | ஸ்ரீதேவியின் கடைசி படம் ஜீரோ |
வேலைக்காரனுக்கு முனபு வரை வேலைவெட்டி இல்லாமல் ஊரைச்சுற்றிக்கொண்டு திரியும் பையனாகத்தான் நடித்து வந்தார் சிவகார்த்திகேயன். எனக்கெல்லாம் கலெக்டர் வேடமா தருவார்கள். இந்தமாதிரி வேடம்தான் தருவார்கள் என்று அவரே மேடைகளில் சொல்வார். ஆனால், அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தபோது, டைரக்டர் மோகன்ராஜாவை சந்தித்து தனிஒருவன் போன்று எனக்கு ஒரு கதை பண்ணுங்கள் என்று கேட்டுக்கொண்டார் சிவகார்த்திகேயன்.
அதன்பிறகு உருவானதுதான் வேலைக்காரன். அந்த படத்தை அடுத்து தற்போது மீண்டும் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் பாணியில் பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், அதைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். முதல் படத்தில் டைம்லைன் சம்பந்தப்பட்ட கதையை படமாக்கிய ரவிக்குமார், இந்த படத்தை ஒரு விஞ்ஞானி சம்பந்தப்பட்ட கதையில் படமாக்குகிறார். அதாவது வேற்று கிரகவாசிகளிடமிருந்து மனிதர்களை காப்பாற்றும் ஒரு விஞ்ஞானியின் கதையை படமாக்குகிறார்.
ஆக, எந்திரன் படத்தில் ரஜினி விஞ்ஞானியாக நடித்ததைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனும் விஞ்ஞானியாக தனது கெட்டப்பை மாற்றி நடிக்கப்போகிறார்.