ஸ்ரீதேவி திடீர் மரணம்: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் | ஏதோ தப்பா படுது- ஸ்ரீதேவி மறைவுக்கு முன் அமிதாப் ட்வீட் | ஐந்து வருடங்கள் ஆறப்பட்ட கதை | ரித்திகா சிங் நடிக்க மறுத்த படத்தில் நிகிஷா பட்டேல் | கெட்டப்பை மாற்றும் சிவகார்த்திகேயன் | அஜீத்தின் விசுவாசம், வீரம் படத்தின் இரண்டாம் பாகமா? | கரு பட யூனிட்டை வியக்க வைத்த சாய் பல்லவி | மகாநதியில் நடிக்க மறுத்த அனுஷ்கா | பிகினிக்கு மறுப்பு சொன்ன அனுபமா | ஸ்ரீதேவியின் கடைசி படம் ஜீரோ |
நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் தயாராகி வரும் படம் மகாநதி. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடிக்க, சமந்தா ஒரு நிருபர் வேடத்தில் நடிக்கிறார். துல்கர் சல்மான் ஜெமினி வேடத்தில் நடிக்க, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட மேலும் சில பிரபலங்களும் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் அப்படத்தில் பானுமதி வேடத்தில் நடிக்க அனுஷ்காவுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால், அது கெஸ்ட் ரோல் என்பதால் அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டார் அனுஷ்கா. அதோடு, வழக்கமான கதாநாயகியாக இனிமேல் நடிக்க மாட்டேன். வித்தியாசமான வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறி வருகிறார் அனுஷ்கா.
அதோடு, கெளதம்மேனன் இயக்கத்தில் உருவாகும் மல்டி ஹீரோ படத்தில் அனுஷ்கா நடிப்பதாக கூறப்பட்டபோதும், அந்த படத்தை அவர் எப்போது எடுக்கிறார் என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதனால், பாகமதிக்குப்பிறகு இன்னும் எந்த படத்திலும் கமிட்டாகாமல் குழப்பத்தில் இருக்கிறார் அனுஷ்கா.