மயிலை யாரும் மறக்க முடியாது : சிவகுமார் | ஈடு செய்ய முடியாத இழப்பு : ஸ்ரீதேவிக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் | ஸ்ரீதேவி மறைவு : ஹிந்தி திரையுலகம் அதிர்ச்சியுடன் கூடிய இரங்கல் | கனவு மடிந்துவிட்டது : ஸ்ரீதேவியின் மறைவுக்கு இளம் நடிகைகள் இரங்கல் | இந்தியாவின் திறமையான நடிகை ஸ்ரீதேவி : இளையராஜா | மூன்றாம் பிறை பாடல் தான் பாட தோன்றுகிறது : ஸ்ரீதேவி குறித்து கமல் உருக்கம் | சினிமா ஒரு சாதனையாளரை இழந்துவிட்டது : ரஜினி | ஸ்ரீதேவி பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி வீடியோ | ஸ்ரீதேவி திடீர் மரணம்: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் | ஏதோ தப்பா படுது- ஸ்ரீதேவி மறைவுக்கு முன் அமிதாப் ட்வீட் |
இந்தியா முழுக்க தனது நடிப்பு திறமையால் வியக்க வைத்த ஸ்ரீதேவி, இன்று உயிரோடு இல்லை. திடீர் மாரடைப்பு அவரின் உயிரை பறித்துவிட்டது. ஸ்ரீதேவியின் மறைவுக்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்றைக்கு இருக்கும் பல இளம் நடிகைகளுக்கும் அவர் ரோல் மாடலாக இருந்திருக்கிறார். அப்படி தமிழ் சினிமாவில் இருக்கும் இளம் நடிகைகள், ஸ்ரீதேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இதோ...
ஸ்ரீதேவியின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியானேன். அவர் எனது உந்துதல் சக்தி. நான் நடிக்க முக்கிய காரணமும் அவர் தான். நடிப்பு உள்ளிட்ட எல்லாவிஷயங்களிலும் என் ரோல்மாடலும் அவர் தான். இந்திய சினிமாவுக்கு மட்டுமல்ல உலக சினிமாவிற்கும் பேரிழப்பு. ஒரு ரசிகையாக அவரை சந்திக்க வேண்டும் என ஆசைப்பட்டேன், அந்த கனவும் இறந்துவிட்டது. எப்போதும் அவரின் நினைவு இருக்கும் என கூறியுள்ளார் நடிகை மகிமா.
நிறைய நடிகைகளுக்கு முன்மாதிரியாகவும், ரோல் மாடலாகவும் இருந்தவர். அவரின் மறைவு செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியானேன். ஸ்ரீதேவியின் வளர்ச்சியை பார்த்து நிறைய விஷயம் கற்று கொண்டேன். வாழ்க்கையில் இதுபோன்ற திடீரென எதிர்பாராத விஷயங்கள் நடக்கும். ஸ்ரீதேவியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் என கூறியுள்ளார் நடிகை ஆஷ்னா சவேரி.
இனம், மொழி என பல தடைகளை கடந்து சாதனை படைத்தவர். ஸ்ரீதேவிக்கு என்ன நடந்தது என நினைக்கும்போதும், குறைந்த வயதில் நம்மை விட்டு சென்றதும் மனதுக்கு வருத்தமாக உள்ளது. அவரது குடும்பம் எப்படி இதை ஏற்பார்கள் என்று..? என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை என கூறியுள்ளார் நடிகை காயத்ரி.
எனது ஆல் டைம் பேவரிட் ஹீரோயின் ஸ்ரீதேவி தான். அவரின் அழகு, நடிப்பு மற்றும் திறமையை பார்த்து வியந்திருக்கிறேன். இந்த பூமியில் அவர் இல்லை என நினைக்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. அவரின் நினைவுகள் என்றும் பொக்கிஷங்களாக இருக்கும். அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார் நடிகை சஞ்சிதா ஷெட்டி.
ஸ்ரீதேவி, நல்ல திறமையான அழகான நடிகை. அவரின் மரணம் செய்தி யாராலும் ஏற்க
முடியாது. என்றும் மக்கள் மனதில் அவர் வாழ்வார் என்கிறார் வல்லினம்
மிருதுளா.
இவ்வளவு சீக்கிரம் நம்மளை விட்டு சென்றுவிட்டார், மிகவும்
வருத்தமளிக்கிறது. அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும் என நடிகை ரேகா
கூறியுள்ளார்.