ஸ்ரீதேவி திடீர் மரணம்: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் | ஏதோ தப்பா படுது- ஸ்ரீதேவி மறைவுக்கு முன் அமிதாப் ட்வீட் | ஐந்து வருடங்கள் ஆறப்பட்ட கதை | ரித்திகா சிங் நடிக்க மறுத்த படத்தில் நிகிஷா பட்டேல் | கெட்டப்பை மாற்றும் சிவகார்த்திகேயன் | அஜீத்தின் விசுவாசம், வீரம் படத்தின் இரண்டாம் பாகமா? | கரு பட யூனிட்டை வியக்க வைத்த சாய் பல்லவி | மகாநதியில் நடிக்க மறுத்த அனுஷ்கா | பிகினிக்கு மறுப்பு சொன்ன அனுபமா | ஸ்ரீதேவியின் கடைசி படம் ஜீரோ |
ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ என்ற படத்தை இயக்கி நடிக்கயிருந்தார் எம்ஜிஆர். ஆனால் அதன்பிறகு அடிமைப்பெண் என்ற படத்தில் நடித்த அவர் பின்னர் முழுநேர அரசியலில் இறங்கி விட்டதால் அந்த படத்தை எடுக்கவில்லை. ஆனால், தற்போது வேல்ஸ் பிலிம் இண்டர்நேசனல் மற்றும் பிரபுதேவா ஸ்டுடியோஸ் இணைந்து கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ படத்தை அனிமேஷன் படமாக தயாரிக்கிறார்கள்.
இந்த படத்தின் பூஜை எம்ஜிஆர் பிறந்த நாளில் நடைபெற்றது. அப்போது ரஜினி-கமல் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிலையில், பிப்ரவரி 24-ந்தேதியான நேற்று ஜெயலலிதா பிறந்த நாள் என்பதால் அவரும் அந்த படத்தில் நடிப்பதை அறிவித்தனர். மேலும், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவரும் இதுவரை 28படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். அந்த வகையில், கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ அவர்களது 29வது படமாகும் .
இந்த படத்தில் நம்பியார், தேங்காய் சீனிவாசன், நாகேஷ் ஆகியோரும் அனிமேஷன் வடிவில் நடிக்க உள்ளனர். 2019-ம் ஆண்டு ஜனவரியில் எம்ஜிஆர் பிறந்த நாள் அன்று இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். மேலும், இப்படத்தை அருண் மூர்த்தி இயக்குகிறார். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். எம்ஜிஆர் படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதும் முதல் படம் இது.