வட சென்னை கதை என்ன? | டுவீட் போட்டு வம்பில் மாட்டிக் கொண்ட கஸ்தூரி | கார்த்திக் சுப்பாராஜ் தரும் உத்தரவாதம் | ஆக்ஷ்னை விரும்பும் காஜல் அகர்வால் | ஸ்ரீதேவியும் ஐ.வி.சசியும் 'அ ஆ' வரிசை படங்களும்..! | கதாநாயகியை அறைந்த குற்ற உணர்ச்சியால் தவித்த ஜெயசூர்யா | குளியல் தொட்டியில் மூழ்கி இறந்தார் : ஸ்ரீதேவி மரணம் குறித்து புதிய தகவல் | ஸ்ரீதேவி குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல செல்கிறேன் : கமல் | மோகன்லாலுக்காக போடப்பட்ட 25 ஸ்கெட்ச் | மொழியை நேசியுங்கள் : மலையாளத்தில் டப்பிங் பேசிய சித்தார்த்..! |
சுமார் 8 வருடங்களுக்கு முன், அதாவது 2010-ல் பவன் கல்யான் ஜோடியாக 'புலி' என்ற படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நிகிஷா பட்டேல். அதன் பிறகு தமிழில் ஜெ.ஜெ.டிவி பாஸ்கரனுக்கு ஜோடியாக 'தலைவன்' என்ற படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.
இந்த படத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக் ஜோடியாக 'என்னமோ ஏதோ'படத்தில் நடித்தார் நிகிஷா பட்டேல்.தொடர்ந்து, 'கரையோரம்', 'நாரதன்', '7 நாட்கள்' ஆகிய படங்களில் நடித்தும் அவரால் தமிழில் க்ளிக்காக முடியவில்லை. இந்நிலையில் இப்போது தெலுங்கு படங்களில் நடிக்க மீண்டும் ஆர்வம் காட்டி வருகிறார் நிகிஷா பட்டேல். அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் தெலுங்குப் படத்தில் நிகிஷா பட்டேலுக்கு அதிரடி ஆக்ஷன் கலந்த கேரக்டர்.
இந்த கேரக்டரில் நடிக்க முதலில் இறுதிச்சுற்று ரித்திகா சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. என்ன காரணத்தினாலோ ரித்திகா நடிக்க மறுத்துவிட்டதால், நிகிஷா பட்டேலை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தப்படத்தில் நடிப்பது குறித்து, ''நான் நிஜத்தில் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை. எனக்கு ஆக்ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை இருந்தது. அந்த ஆசை இந்த படம் மூலம் நிறைவேறியுள்ளது.” என்று கூறியுள்ள நிகிஷா பட்டேல், தொடர்ந்து இதுபோன்ற ஆக்ஷன் படங்களில் நடிக்க விரும்புகிறாராம்.