புதுடில்லி:வங்கி மோசடியில் ஈடுபட்டு, வெளிநாடு தப்பியுள்ள, பிரபல வைர வியாபாரி, நிரவ் மோடி, மேற்கிந்தியத் தீவுகளின் குட்டித் தீவான, செயின்ட் கிட்ஸ் தீவில் குடும்பத்துடன் பதுங்கிஇருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரிகள் உதவியுடன், 11 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, பிரபல வைர வியாபாரி, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினரான, 'கீதாஞ்சலி' என்ற பெயரில் நகை வியாபாரம் செய்யும், மெஹுல் சோக்சி உள்ளிட்டோர் மீது புகார்கள் எழுந்தன.
கடந்த மாத துவக்கத்தில், நிரவ் மோடி,
அவரது மனைவி ஆமி, சகோதரர் நீஷால் மோடி, மாமா சோக்சி ஆகியோர் வெளிநாடு தப்பி சென்றனர். பல அமைப்புகளின் விசாரணை
நடக்கும் நிலையில், அவர்களது பாஸ்போர்ட்டை, மத்திய அரசு, நேற்று முன்தினம்
இரவு முடக்கிவைத்தது. இதற்கிடையே, மேற்கிந்தியத் தீவுகளின் குட்டித் தீவான செயின்ட் கிட்ஸில், நிரவ் மோடி உள்ளிட்டோர் பதுங்கிஇருப்பதாக தெரியவந்து உள்ளது.
அந்தத் தீவில், ஒரு சொகுசு பங்களாவை, நிரவ் மோடி ஏற்கனவே வாங்கி வைத்துள்ளார். குற்ற வாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் பல நாடு களுடன் செய்யப்பட்டுள்ளது. ஆனால், செயின்ட் கிட்ஸ் நாட்டுடன் அது போன்ற ஒப்பந்தம் செய்யப் படவில்லை.
மேலும், அந்த நாட்டின் குடியுரிமையை நிரவ் பெற்றுள்ளார். அதனால், அவர் அங்கிருப்பது உறுதி செய்யப்பட்டாலும், அவரை நாடு கடத்துவது அவ்வளவு சுலபமில்லை என, வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், 15 வங்கிகளில் கடன் வங்கி, 6,800
கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக, மற்றொரு வைர வியாபாரியான, 'வின்சம் டயமன்ட் குரூப்ஸ்' நிறுவனத்தின் உரிமை யாளர், ஜதின் மேத்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.அப்போது, அவரும், செயின்ட் கிட்ஸ் தீவில் அடைக்கலம் புகுந்தார்.
தற்போது அதே பாணியில் நிரவ் மோடியும் செயல்பட்டுள்ளார்.'கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' உரிமையாளர் விஜய் மல்லையாவுக்குப் பின், மிகப் பெரிய வங்கி கடன் மோசடியில் ஜதின் மேத்தா இரண்டாவது இடத்தில் இருந்தார். தற்போது இந்தப் பட்டியலில், நிரவ் மோடி முதலிடத்தில்உள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (38)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply