வட சென்னை கதை என்ன? | டுவீட் போட்டு வம்பில் மாட்டிக் கொண்ட கஸ்தூரி | கார்த்திக் சுப்பாராஜ் தரும் உத்தரவாதம் | ஆக்ஷ்னை விரும்பும் காஜல் அகர்வால் | ஸ்ரீதேவியும் ஐ.வி.சசியும் 'அ ஆ' வரிசை படங்களும்..! | கதாநாயகியை அறைந்த குற்ற உணர்ச்சியால் தவித்த ஜெயசூர்யா | குளியல் தொட்டியில் மூழ்கி இறந்தார் : ஸ்ரீதேவி மரணம் குறித்து புதிய தகவல் | ஸ்ரீதேவி குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல செல்கிறேன் : கமல் | மோகன்லாலுக்காக போடப்பட்ட 25 ஸ்கெட்ச் | மொழியை நேசியுங்கள் : மலையாளத்தில் டப்பிங் பேசிய சித்தார்த்..! |
அண்ணாதுரை படத்தை அடுத்து தற்போது காளி படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. காளி விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கத்தில் 'திமிரு பிடிச்சவன்'என்ற படத்தில் நடித்து வருகிறார். சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பே 'திமிரு பிடிச்சவன்' கதையைக் கேட்டு ஓகே பண்ணிய விஜய் ஆண்டணி தற்போதுதான் அதில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
விஜய் ஆண்டனியிடம் கதையை சொல்லிவிட்டு ஐந்து வருடங்கள் காத்திருந்த இயக்குநர் ஒருகட்டத்தில் வெறுத்தே போய்விட்டார். ஆரம்பகட்டத்தில் இந்த கதையில் நடித்தால் வொர்க்அவுட்டாகாது கொஞ்சம் பிரபலமான பிறகு நடிப்பதே நல்லது என்பதால்தான் இத்தனை வருடங்கள் காத்திருக்க வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. அதாவது கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தில் சத்யராஜ் நடித்ததைப்போன்ற முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரி கேரக்டராம்.
'திமிரு பிடிச்சவன் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 1-ஆம் தேதி துவங்குகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.