புதுடில்லி:''அனைத்து துறைகளிலும் பெண்கள் ஈடுபடுவதை உறுதி செய்வது ஒவ்வொரு இந்தியரின் அடிப்படை கடமை,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
'மன் கி பாத்' என்ற பெயரில், ஒவ்வொரு மாதமும், ரேடியோ மூலம், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். இந்த மாதத்துக் கான நிகழ்ச்சி, ஒலிபரப்பானது. ரேடியோ உரையில், பிரதமர் மோடி கூறியதாவது:
மன உறுதி மற்றும் தன்னம்பிக்கையின் மூலமே, பெண்கள் சுய சார்புள்ளவர்களாக உள்ளனர். இதுவே, இன்றைய பெண்களின் வலிமையாக உள்ளது; இவ்வாறு பெண்கள் தங்களை வளர்த்துக் கொள்வதுடன், இந்த சமூகத்தையும், நாட்டையும் வளர்ச்சியின் பாதையில் இட்டுச்செல்கின்றனர்.
பெண்களின் முன்னேற்றம் என்பதில் இருந்து, பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் என்ற நிலைக்கு, நாடு மாறி வருகிறது. அனைத்து துறைகளிலும் அது, சமூகம் அல்லது பொருளாதாரத் துறையாக இருந்தா லும், பெண்களின் பங்களிப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டியது, அனைத்து இந்தியர்களின் அடிப்படை கடமை. வரும், மார்ச், 8ம் தேதி சர்வதேச
பெண்கள் தினத்தை கொண்டாட
உள்ளோம். 'சரியான பெண் உரிமையே, சரியான
விடுதலை' என, சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.
பெண்களால் தான்
நாம் அடையாளம் காட்டப் படு கிறோம். புராணத்தில் கூட, யசோதாநந்தன்,
கவுசல்யாநந்தன், காந்தாரி புத்ரன் என, ஆண்கள் அடையாளம் காட்டப்படுகின்றனர்.
புதிய இந்தியாவைநோக்கி நாம் பயணம் செய்கிறோம். பெண்கள் வலிமையானவர்களாக, வளர்ச்சியில் சம பங்கு உள்ளவர்களாக, அதிகாரமுள்ளவர்களாக இருப்பதும், புதிய இந்தியாவின் இலக்கு.
பாதுகாப்பு முக்கியம்
வரும், 28ம் தேதியை, தேசிய அறிவியல் தினமாக கொண்டாடுகிறோம். இந்த நாளில், ஏன், எதற்கு, எப்படி என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் வரை, நாம் ஓயக் கூடாது. புதிய அறிவியல் தேடல்கள் தொடர வேண்டும்.மார்ச், 4ம் தேதியை தேசிய பாதுகாப்பு நாளாக அனுசரிக்க உள்ளோம். நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கைக் கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தெரிந்து கொள்ளாவிட்டால், ஆபத்து காலத்தில் இருந்து தப்பிப்பது கடினமாகி விடும்.
சாலையில் உள்ள பாதுகாப்பு குறித்த வாசகங்களை படிக்கிறோம். ஆனால், அதை கடைபிடிப்பதில்லை. அந்த வாசகங்களை படிப்பதுடன், அதன்படி செயல் பட்டால், விபத்துகளை தவிர்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
கழிவில் இருந்தும் சம்பாதிக்கலாம்!
'மன் கி பாத்'
ரேடியோ உரையில், மோடி, மேலும்
கூறியதாவது:'கோபர் தன்'
என்ற சாண எரிவாயு திட்டத்தால், மின்சாரம் கிடைப்பதுடன், கிராமங்களும்
துாய்மை அடைகின்றன.நம் நாட்டில், 30 கோடி கால்நடைகள் உள்ளன. உலகிலேயே
மிகவும்அதிக அளவில் கால்நடைகள் நம் நாட்டில் தான் உள்ளன.
இந்தக் கால்நடைகள் மூலம், தினமும், 30 லட்சம் டன் சாணம் கிடைக்கிறது. இதைத் தவிர, கிராமங்களில் உருவாகும் விவசாய கழிவுகள் போன்றவற்றின் மூலம், சாண எரிவாயுவை உருவாக்கிட முடியும். இதன் மூலம், பணம் சம்பாதிக்கலாம்; மேலும் கிராமங்களும் துாய்மையாகின்றன.
கால்நடை கழிவுகளை சேகரிப்பது, அதை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லுதல், சாண எரிவாயு தயாரித்தல், அந்த மின்சாரத்தை விற்பது போன்றவற்றுக்காக விரைவில், 'ஆன்லைன்' வசதி செய்யப்படும்.இதன்மூலம், விவசாயிகள் மற்றும் சாண எரிவாயுவை வாங்கும் நிறு வனங்கள் இடையே நேரடி தொடர்பு ஏற்படும். கிராமங்களில் உள்ள பெண்கள், சுயஉதவிக் குழுக்களை அமைத்து, இந்தத் தொழிலில் ஈடுபடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து