புதுடில்லி:ராஜ்யசபாவில் காலியாகும், 58 இடங்களுக்கு அடுத்த மாதம் நடக்கவுள்ள தேர்தலின் மூலம், தங்களுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என, பா.ஜ., தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நட்பு
உ.பி., உள்ளிட்ட, 16 மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட, 58 எம்.பி.,க்களின் பதவிக் காலம், விரைவில் முடிவடைகிறது. இதை அடுத்து, அடுத்த மாதம், இந்த, 58 இடங்களுக் கும் தேர்தல் நடக்கஉள்ளது. உ.பி.,யில் இருந்து மட்டும், 10 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட
உள்ளனர். தற்போது, உ.பி., சட்டசபையில், பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இருப்பதால், எட்டு எம்.பி.,க் களை, பா.ஜ.,வால் தேர்வு செய்ய முடியும்.
இதேபோல்,ராஜஸ்தானிலிருந்து, மூன்று எம்.பி.,க்களை, பா.ஜ.,வால் தேர்வு செய்ய முடியும். மேலும், பா.ஜ., வின் கூட்டணி கட்சிகள், நட்பு ரீதியிலான, கட்சி களும், கணிசமான, எம்.பி.,க்களை தேர்வு செய்யும் நிலை உள்ளது.
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: விரைவில் நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தலின் மூலம், தே,ஜ., கூட்டணிக்கு அதிக, எம்.பி.,க்கள் கிடைக்க உள்ளனர்.
வாய்ப்பு
இதன்மூலம், ராஜ்யசபாவில் பெரும்பான்மைக்கு தேவையான, 254 இடங்கள் கிடைத்து விடும்.
ஏற்கனவே, ராஜ்யசபாவில், 58, எம்.பி.,க்களை பெற்று, தனிபெரும் கட்சியாக, பா.ஜ., உருவெடுத்து
உள்ளது.இனி, தே.ஜ., கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைத்து விடும். தற்போது பெரும்பான்மை இல்லாத தால், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை.
பெரும்பான்மை கிடைப்பதன் மூலம், நிலுவை யில் உள்ள அனைத்து மசோதாக் களையும் நிறைவேற்ற முடியும். முரளிதர் ராவ் உள்ளிட்ட, கட்சியின் பொதுச் செயலர்களாக பதவி வகிக்கும் பலருக்கு, ராஜ்யசபா தேர்த லில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படலாம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (17)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply