வில்லனாக நடிக்க தோற்றம் அவசியமில்லை : அப்பாணி சரத் | சச்சினை சந்தித்த மகிழ்ச்சியில் புருவ அழகி..! | சிம்புவை ஒழித்து கட்ட கட்டப்பஞ்சாயத்து : டி.ராஜேந்தர் குமுறல் | எங்களை மன்னித்துவிடு மது : மம்முட்டி உருக்கம் | 1971-ஐ 'யுத்தபூமி' ஆக்கிய அல்லு சிரிஷ்..! | மார்ச் 1 முதல் ஸ்டிரைக், முடிவடையாத பிரச்சினை | நெடுவாசல் மக்களை சந்திக்கிறார் கமல் | இர்பான் - தீபிகா படம் தள்ளிப்போனது | சர்ச்சை சாமியார் ரஜினீஸ் வாழ்க்கை சினிமாவாகிறது | நல்ல கதைக்காக காத்திருந்தேன் - சாய் பல்லவி |
தமிழ் சினிமா உலகில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலும் வசூல் நாயகனாக பார்க்கப்படுபவர் ரஜினிகாந்த். மாநில மொழி சார்ந்த படங்களில் அவருடைய படங்களின் வசூல் ஹிந்திப் படங்களை விடவும் அந்தக் காலத்திலேயே தனி சாதனை படைத்தவை.
திரையுலகிற்கு வரும் பலரின் கனவு, அவருடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும் அல்லது இயக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். இன்றைய இளம் நடிகர், நடிகைகள், இயக்குனர்களுக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு என்பது பெரிய ஒன்றாகும். அவர்களுடைய இமேஜ், சம்பளம் ஆகியவை இதன் மூலம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும்.
'கபாலி, காலா' என அடுத்தடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்து ஆச்சரியப்படுத்திய ரஜினிகாந்த், அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க சம்மதித்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் கார்த்திக் சுப்பராஜ் கடைசியாக இயக்கிய 'இறைவி' படம் சரியாகப் போகவில்லை. மேலும் அவர் இயக்கும் படங்களில் வீணாக பட்ஜெட்டை ஏற்றிவிடுவார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உண்டு.
இருந்தாலும் அவர் இயக்கிய 'ஜிகர்தண்டா' படத்தைப் பார்த்து ரஜினிகாந்த் அவரைப் பாராட்டியிருந்தார். இதனிடையே, கார்த்திக் சுப்பராஜ் எப்படி ரஜினியை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார் என்று பலரும் யோசித்து வருகிறார்கள். அடுத்து ஒரு படம் நடிக்க வேண்டும் என்றால் அது அரசியல் படமாகத்தான் இருக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் முடிவெடுத்திருந்தாராம். இதற்காக அவர் பலரிடம் கதைகளைக் கேட்டிருக்கிறார். அதில் கார்த்திக் சொன்ன கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போனதாம். அதனால் தான் வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் உடனே நடிக்க சம்மதித்துள்ளார்.
எம்ஜிஆரும் தீவிர அரசியல் இறங்குவதற்கு முன்பாக கடைசியாக அரசியல் படங்களில் தான் நடித்தார். அதைப் போலவே ரஜினிகாந்தும் சில அரசியல படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். அதன் முதல்படி தான் இந்த புதிய படம் என்கிறார்கள்.