வில்லனாக நடிக்க தோற்றம் அவசியமில்லை : அப்பாணி சரத் | சச்சினை சந்தித்த மகிழ்ச்சியில் புருவ அழகி..! | சிம்புவை ஒழித்து கட்ட கட்டப்பஞ்சாயத்து : டி.ராஜேந்தர் குமுறல் | எங்களை மன்னித்துவிடு மது : மம்முட்டி உருக்கம் | 1971-ஐ 'யுத்தபூமி' ஆக்கிய அல்லு சிரிஷ்..! | மார்ச் 1 முதல் ஸ்டிரைக், முடிவடையாத பிரச்சினை | நெடுவாசல் மக்களை சந்திக்கிறார் கமல் | இர்பான் - தீபிகா படம் தள்ளிப்போனது | சர்ச்சை சாமியார் ரஜினீஸ் வாழ்க்கை சினிமாவாகிறது | நல்ல கதைக்காக காத்திருந்தேன் - சாய் பல்லவி |
ஏப்ரல் 4ம் தேதி திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு முன் நெடுவாசலில் போராட்டம் நடத்தும் மக்களை சந்திக்க மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் முடிவு செய்துள்ளார்.
ஆலோசனை
மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவக்கிய நடிகர் கமல், தொடர்ந்து திருச்சியில் வரும் ஏப்ரல் 4ம் தேதி மாநாடு நடத்த போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் அடுத்த கட்ட பயணம் மற்றும் கிராமங்கள் தத்தெடுப்பு தொடர்பாக ஆலோசனை நடந்தது.
ஏப்ரல் 4ல் திருச்சி பொதுக்கூட்டத்தில் கமல் பங்கேற்பது என்றும், முன்னதாக ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் போராட்டம் நடத்தும் மக்களையும், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ,புதுக்கோட்டை மாவட்ட கிராம மக்களை நேரடியாக சந்திப்பது என்றும் கமல் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.