சச்சினை சந்தித்த மகிழ்ச்சியில் புருவ அழகி..! | சிம்புவை ஒழித்து கட்ட கட்டப்பஞ்சாயத்து : டி.ராஜேந்தர் குமுறல் | எங்களை மன்னித்துவிடு மது : மம்முட்டி உருக்கம் | 1971-ஐ 'யுத்தபூமி' ஆக்கிய அல்லு சிரிஷ்..! | மார்ச் 1 முதல் ஸ்டிரைக், முடிவடையாத பிரச்சினை | நெடுவாசல் மக்களை சந்திக்கிறார் கமல் | இர்பான் - தீபிகா படம் தள்ளிப்போனது | சர்ச்சை சாமியார் ரஜினீஸ் வாழ்க்கை சினிமாவாகிறது | நல்ல கதைக்காக காத்திருந்தேன் - சாய் பல்லவி | கிக்-2 வில் ஜாக்குலின் நடிக்கிறார் |
கனடா நாட்டைச் சேர்ந்த நீலப்பட நடிகை சன்னி லியோன். இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவுக்குள் வந்த அவர், அப்படியே பாலிவுட் படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடும் நடிகை ஆனார். தென்னிந்தியாவிலும் ஓரிரு படங்களில் ஆடினார்.
தற்போது தமிழில் தயாராகும் வீரமாதேவி என்ற சரித்திரப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக வாள்சண்டை, குதிரையேற்றம் பயிற்சி எடுத்து வரும் அவர், தமிழ் பேசவும் கற்று வருகிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
ஒரு சரித்திர பெண்ணாக நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு, அது இப்போது நிறைவேறியிருக்கிறது. தென்னிந்தியாவின் கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதனால் தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறேன். மற்ற பிராந்திய மொழிகளிலும் நடிப்பேன்.
வீரமாதேவி படத்திற்காக லாஸ் ஏஞ்சல்சில் குதிரையேற்ற பயிற்சி செய்து வருகிறேன். படத்திற்காக தமிழ் மொழியை பேசக் கற்று வருகிறேன். படத்தில் நடிக்கிறேன் என்பதற்காக கற்கவில்லை. பொதுவாகவே எனக்கு புதிய மொழிகளை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகம் என்கிறார் சன்னி லியோன்.