அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியதாலும், அதில், எல்லா தலைவர்களும் பங்கேற்ற தாலும், முதல்வர் தரப்பு, மகிழ்ச்சியில் இருப்ப தாக தெரிய வந்துள்ளது.சசிகலாவால் முதல்வ ராக முடியாததால், அமைச்சராக இருந்த பழனி சாமிக்கு, முதல்வராகும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின், காட்சிகள் மாறின. பழனிசாமி,தன் பதவியை தக்கவைக்க,சசிகலா குடும்பத்தை ஒதுக்கினார்.
ஓராண்டு
அதனால், அவரது ஆட்சியை கவிழ்த்து விடுவது என்ற முடிவுடன், தினகரன், தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். அனைத்தையும் முறியடித்து, பழனிசாமி, முதல்வர் நாற்காலியில், ஓராண்டை நிறைவு செய்து விட்டார். எனினும், தமிழக அரசியல்
தலைவர்கள், பழனிசாமியை முதல்வராக ஏற்க மறுத்து, தாறுமாறாக விமர்சித்தனர்.
விரைவில்,
ஆட்சி கவிழ்ந்து விடும் என்றும், ஆரூடம் சொல்லி வந்தனர். இவற்றை சமாளிக்க
தெரியாமல், முதல்வர் திணறி வந்தார். எம்.எல்.ஏ.,க் களை கட்டிக்காப்பதும்
பெரும் சிரமமாக இருந்தது .இந்தசூழ்நிலையில், காவிரி பிரச்னையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வெளியானது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவு குறைக்கப் பட்டது, அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதிலிருந்து தப்ப, எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின் அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார்.
'காவிரி பிரச்னை குறித்து, விவாதித்து முடிவெடுக்க, அனைத்து கட்சிகள் கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும்; இல்லையெனில், நாங்கள் கூட்டுவோம்' என்றார்.இதை பிடித்துக் கொண்ட முதல்வர், உடனடியாக, அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என, அறிவித்தார்.
சுமுக உறவு
அதன்படி, பிப்., 22ல், முதல்வர் பழனிசாமி தலைமையில்,
சென்னையில், அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. அனைத்து கட்சி தலைவர்களும்
பங்கேற்று, முதல்வரிடம் கோரிக்கைகளை
எடுத்துரைத்தனர். ஜெ., முதல்வராக
இருந்த போது, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட தயங்கினார்.அனைத்து
பெருமைகளும், தனக்கு வர வேண்டும்என்பதற்காக, அனைத்து கட்சிகளை சந்திப்பதை தவிர்த்தார்.
ஆனால், 11 ஆண்டுகளுக்கு பின், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, முதல்வர் பழனிசாமி, வரலாற்றில் இடம் பிடித்து விட்டார். அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து பேசி, தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் என, அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக் கின்றனர்.அ.தி.மு.க.,விற்கும் அனைத்து கட்சி கூட்டம், சாதகமாகவே அமைந்துள்ளது. ஏனெனில், இக்கூட்டத்தால், அனைத்து கட்சி களுடன், அ.தி.மு.க., தலைமைக்கு, சுமுக உறவு கிடைத்துள்ளது. - நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து