சச்சினை சந்தித்த மகிழ்ச்சியில் புருவ அழகி..! | சிம்புவை ஒழித்து கட்ட கட்டப்பஞ்சாயத்து : டி.ராஜேந்தர் குமுறல் | எங்களை மன்னித்துவிடு மது : மம்முட்டி உருக்கம் | 1971-ஐ 'யுத்தபூமி' ஆக்கிய அல்லு சிரிஷ்..! | மார்ச் 1 முதல் ஸ்டிரைக், முடிவடையாத பிரச்சினை | நெடுவாசல் மக்களை சந்திக்கிறார் கமல் | இர்பான் - தீபிகா படம் தள்ளிப்போனது | சர்ச்சை சாமியார் ரஜினீஸ் வாழ்க்கை சினிமாவாகிறது | நல்ல கதைக்காக காத்திருந்தேன் - சாய் பல்லவி | கிக்-2 வில் ஜாக்குலின் நடிக்கிறார் |
சிம்புவை ஒழித்துக்கட்ட தயாரிப்பாளர் சங்கத்தில் கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக அவரின் தந்தை டி.ராஜேந்தர் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, தனது தி.நகர் வீட்டில், அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் டி.ராஜேந்தர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிம்புவின் படம் வெளியாகி 6 மாதத்திற்கு பிறகு ஒரு விழாவில் அவருக்கு ரெட் கார்டு போடுவேன் என பேசுகிறார்கள். சிலரின் தூண்டதலால் இது நடக்கிறது. மைக்கேல் ராயப்பன் ரவுடிகளை அழைத்து வந்து என்னையும், என் குடும்பத்தாரையும் மிரட்டினார்.
சிம்புவை ஒழித்துக்கட்ட தயாரிப்பாளர் சங்கத்தில் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது. முதலில் வரியை குறைக்க தயாரிப்பாளர் சங்கம் குரல் கொடுக்கட்டும். தயாரிப்பாளர் சங்கம் என்றால் சிங்கம் மாதிரி இருக்க வேண்டும், ஆனால் அசிங்கமாக இருக்கிறது. சிம்புவிடம் தெம்பும், ரசிகர்களின் அன்பும் உள்ளது, எல்லா பிரச்னையையும் மீறி சிம்பு வெற்றி பெறுவார்.
இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.