புதுடில்லி: பயங்கரவாத குழுக்களுக்கு, பாக்., அளித்து வரும் நிதி உதவியை நிறுத்தாததை கண்டித்து, பாரிசில் நடைபெற்ற, சட்டவிரோத பணப் பரிமாற்ற கண்காணிப்புக் குழு கூட்டத்தில், பாகிஸ்தானை, கறுப்புப் பட்டியலில் சேர்க்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது, பாக்., பொருளாதாரம் மற்றும் அரசியலில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
பாக்.,கில் உள்ள பயங்கரவாதக் குழுக்களுக்கு, அந்நாட்டு அரசு, ஆதரவு அளித்து வருவதை, உடனடியாக நிறுத்த வேண்டும் என்று, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் அறிவித்து இருந்தார். ஆனால், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர், ஹபீஸ் சயீத்துடன் நேரடி தொடர்பு கொண்ட, ஜமாத் - உத் - தவா மற்றும் பலா - இ - இன்சானியத் போன்ற, பயங்கரவாத அமைப்புகளுக்கு, பாக்., தொடர்ந்து நிதி உதவி அளித்து வந்தது.
இதையடுத்து, பாகிஸ்தானுக்கு வழங்கி வரும், ரூ.13 ஆயிரம் கோடிராணுவ நிதி உதவியை நிறுத்துவோம் என, அமெரிக்க அதிபர், டிரம்ப், பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும், பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்க, பாக்., தவறியது.
கண்காணிப்பு:
இந்நிலையில், சட்ட விரோத பணப் பரிமாற்ற கண்காணிப்பு குழு கூட்டம், ஐரோப்பிய நாடான,
பாரிசில் நடந்தது. இதில், அமெரிக்கா, இந்தியா, சீனா, பிரிட்டன், ஜெர்மனி,
பிரான்ஸ் உட்பட, 36 நாடுகள் கலந்து கொண்டன.உலகம் முழுவதும் உள்ள பயங்கரவாத
குழுக்களுக்கான நிதி ஆதாரங்கள் எங்கிருந்து பெறப்படுகின்றன என்பதை, இக்குழு
கண்காணித்து வருகிறது. இக்கூட்டத்தில், பயங்கரவாத செயல்களைஒடுக்க, பாக்., எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பலமுறை எச்சரித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்காததால், பாக்.,கை கறுப்புப் பட்டியலில் சேர்க்க, அமெரிக்கா பரிந்துரை செய்தது. இந்தியா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட, 35 நாடுகள், அமெரிக்காவின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டன.கண்காணிப்புக் குழுவில் உள்ள, 36 நாடுகளில், மூன்று நாடுகள், தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால், அத்தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது.
சீனா பல்டி
சீனா, சவுதி மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தங்களுக்கு ஆதரவாக ஓட்டு அளிக்கும், என, பாக்., எதிர்பார்த்தது. கடைசி நிமிடத்தில், சீனாவும், சவுதியும் பல்டி அடிக்க, துருக்கி மட்டுமே, பாக்.,குக்கு ஆதரவாக ஓட்டளித்தது.
பாக்., கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருப்பதால், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், பாக்.,கில் தொழில் செய்வதில் சிக்கல் ஏற்படும். பாக்.,கில் உள்ள தொழில்நிறுவனங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை, வெளிநாடுகளில் இருந்து பெறுவதிலும் சிக்கல் ஏற்படும் என தெரிகிறது.
மேலும்,
19.50 லட்சம் கோடி ரூபாய் கடனை, ஜூன் இறுதிக்குள், பாக்., செலுத்தியாக
வேண்டும். தவறினால், பாக்.,கின் கடன் தகுதி மதிப்பு, சர்வதேச அளவில்,
பின்னுக்கு தள்ளப்படும்.பாக்.,கில் விரைவில், பொது தேர்தல் நடக்க உள்ளது.
இந்நிலையில், இந்தகறுப்புப் பட்டியல் விவகாரம்,ஆளும், முஸ்லிம் லீக் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.அதோடு, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில், சர்வதேச அமைப்புகளை திருப்திபடுத்த முடியாத அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் போர்க் கொடி உயர்த்தும் அபாயம் எழுந்துள்ளது.
டிரம்புக்கு திருப்தி இல்லை
பாக்., கறுப்புப் பட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து, அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், ராஜ் ஷா கூறியதாவது: பாகிஸ்தான் உடனான உறவை பாதுகாக்க, எல்லா முயற்சிகளையும் அமெரிக்கா மேற்கொண்டது. இந்த முடிவு எடுக்கப் பட்டதற்கு, பாக்.,கின் பொறுப்பற்ற செயலே காரணம்.
கடந்த ஆகஸ்டில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் அறிவித்த தெற்காசிய கொள்கை திட்டத்தில், பயங்கரவாதத்தை ஒடுக்க, பாக்., இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என கூறி இருந்தார். ஆனால், பாக்., எடுத்த நடவடிக்கைகளில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் திருப்தி அடையவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து