வில்லனாக நடிக்க தோற்றம் அவசியமில்லை : அப்பாணி சரத் | சச்சினை சந்தித்த மகிழ்ச்சியில் புருவ அழகி..! | சிம்புவை ஒழித்து கட்ட கட்டப்பஞ்சாயத்து : டி.ராஜேந்தர் குமுறல் | எங்களை மன்னித்துவிடு மது : மம்முட்டி உருக்கம் | 1971-ஐ 'யுத்தபூமி' ஆக்கிய அல்லு சிரிஷ்..! | மார்ச் 1 முதல் ஸ்டிரைக், முடிவடையாத பிரச்சினை | நெடுவாசல் மக்களை சந்திக்கிறார் கமல் | இர்பான் - தீபிகா படம் தள்ளிப்போனது | சர்ச்சை சாமியார் ரஜினீஸ் வாழ்க்கை சினிமாவாகிறது | நல்ல கதைக்காக காத்திருந்தேன் - சாய் பல்லவி |
தெலுங்கில் வெற்றி பெற்ற கிக் படம் ஹிந்தியில் சல்மான் நடிப்பில் அதேபெயரில் ரீ-மேக்கானது. சூப்பர் ஹிட்டான இப்படத்தில் சல்மான் ஜோடியாக ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடித்தார். தற்போது இதன் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சஜித் நாடியாடிவாலா இயக்கி, தயாரிக்கிறார்.
இப்படத்தில் சல்மான் உடன் ஜாக்குலின் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்னர் ஜாக்குலின் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் அவருக்கு பதில் எமி ஜாக்சன் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதை இயக்குநர் சஜித் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், படத்திற்கான முழு கதையை எழுதி முடித்துவிட்டேன். மற்ற பணிகள் நடக்கிறது. ஜாக்குலின் நடிக்கிறார் என்றார். கிக் 2 படம் அடுத்தாண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக உள்ளது.