புதுடில்லி,''நிரவ் மோடி மோசடி செய்துள்ளது தெரிந்தும், ஏழு ஆண்டுகளாக, அது குறித்து, பஞ்சாப் நேஷனல் வங்கியைச் சேர்ந்த, ஓர் அதிகாரி கூட வாய் திறக்காமல் இருந்தது, அதிர்ச்சி அளிக்கிறது,'' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறினார்.
பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான, அருண் ஜெட்லி, டில்லியில் நேற்று கூறியதாவது:இந்தியாவில், தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டிற்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது. புதியவர்கள் தொழில் செய்யவும், வர்த்தகர்கள் விரைவாக தொழில் செய்யவும், அரசு துறைகள் மற்றும் வங்கிகளின் செயல்பாடு களை, எளிமையாக்கி வருகிறோம். வங்கி களில் வர்த்தகர்கள் வைத்துள்ள வாராக்கடன், பெரிய சுமையாகி வருகிறது. இது
மட்டுமின்றி, வங்கிகளை ஏமாற்றும் போக்கும் அதிகரிக்கிறது.
சில வர்த்தகர்களின் இது போன்ற செயலால், எளிமையாக தொழில் செய்ய, மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்குபாதிப்பு ஏற்பட்டு உள்ளது.வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்தவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் வகையில், சட்டங்கள் கடுமையாக்க பட வேண்டும். பஞ்சாப் நேஷனல் வங்கியில், 2011ம் ஆண்டிலேயே மோசடி துவங்கி உள்ளது. ஆனால், இந்த ஏழு ஆண்டுகளில், வங்கி அதிகாரிகள் ஒருவர் கூட, அது பற்றி வாய் திறக்க வில்லை; எச்சரிக்கையும் விடுக்கவில்லை.
இது போன்ற மோசடிகளுக்கு பதில் சொல்ல வேண்டியது, முதலில், வங்கி நிர்வாகம் தான். ஆனால், நம் நாட்டில், அரசியல்வாதிகள் தான் பதில் சொல்ல வேண்டி உள்ளது.இவ்வாறு அவர்
கூறினார்.
வங்கிகள் தனியார் மயம்?
வங்கி
மோசடிகள் அதிகரிக்கும் நிலையில், வங்கிகளை தனியார் மயமாக்க வேண்டும் என,
கோரிக்கையும் எழுந்துள்ளது. எப்.ஐ.சி.சி.ஐ., எனப்படும், இந்திய தொழில்
மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் தலைவர், ராஷேஷ் ஷா, சமீபத்தில் கூறுகையில்,
'மத்திய நிதி அமைச்சரை சந்தித்த நான், வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை, துவக்க வேண்டும் வலியுறுத்தினேன்' என்றார்.
இந்நிலையில் இது பற்றி, மத்திய நிதி அமைச்சர், அருண் ஜெட்லி கூறியதாவது: வங்கிகளை தனியார் மயமாக்குவது எளிதல்ல. இதற்கு, அரசியல் ரீதியாக ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். மேலும், வங்கி ஒழுங்கு முறை சட்டத்தில் திருத்தம் செய்து, மசோதா நிறைவேற்றப் பட வேண்டும். இப்போது ள்ள நிலையில், இதற்கு வாய்ப்பில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து