மார்ச்சில் நடக்க உள்ள, காங்., கட்சியின் மாநாடு, மிகப்பெரியதாக இருக்கும். அதே நேரத்தில், அடுத்த லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், தேசிய அளவில், அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
காங்., மாநாடு, கடைசியாக, 2010 டிசம்பரில் நடந்தது. ஏழு ஆண்டுகள் இடைவெளிக்கு பின், மார்ச் 16 - 18ல், டில்லியில், அடுத்த மாநாடு நடக்க உள்ளது.
ஆலோசனை கூட்டம்
இந்த மாநாடு, காங்கிரசினர் மத்தியிலும், அரசியலிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.வரும், 2019 லோக்சபா தேர்தலுக்கு, கட்சியை தயார் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டமாக இது அமையும். தலைவராக, ராகுல் பதவியேற்ற பின் நடக்கும் முதல் மாநாடு என்பதால், கட்சியின் எதிர்கால பயணம் எப்படி இருக்கும் என்பதும், இதில் தீர்மானிக்கப்படும்.
நாடு முழுவதும் இருந்து, மாவட்ட அளவிலான நிர்வாகிகள், இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இதில், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள்
குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மூன்று முக்கிய அம்சங்களில், காங்., தலைவர், ராகுலின் முடிவு, செயல்பாடு எப்படி
இருக்கும் என்பதே, அனைத்து தரப்பினர் இடையே, ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
சவால்கள்
குறிப்பாக, பிரதமர் மோடிதலைமையிலான, பா.ஜ.,வின் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்வதற் கான திட்டங்களை, ராகுல் அறிவிப்பார் என, கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர். காங்., ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கட்சியின் கட்ட மைப்பை வலுப்படுத்த, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க, அவருடைய திட்டங்கள் என்னவாக இருக்கும் என்பதும், இந்த மாநாட்டில் தெரிய வரும்.
கட்சியின் செயற்குழு கலைக்கப்பட்டு, தற்காலிக உயர்நிலை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டில், செயற்குழுவுக்கான தேர்தல் நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
வரலாறு
கடந்த, 133 ஆண்டு கால கட்சியின் வரலாற்றில், ஐந்து முறை மட்டுமே, தேர்தல் மூலம், செயற்குழு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதுவும், கட்சி வளர்ச்சிக்கு அடிப்படையாகஇருக்கும் என்பதால், இதில், ராகுலின் முடிவு என்னவாக இருக்கும் என்பதும், எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் நடக்குமா?
காங்கிரசில் உள்ள பல்வேறு குழுக்களில்,
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, அதன் செயற்குழு. டில்லியில் நடக்க உள்ள, கட்சியின் மாநாட்டில், செயற்குழு உட்பட, கட்சியின் பல்வேறு அமைப்புகளை மாற்றி அமைக்க, கட்சித் தலைவர், ராகுல் திட்டமிட்டு உள்ளார். இதற்கான பணிகளில், முன்னாள், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான, கே.ராஜு ஈடுபட்டு உள்ளார். ஐ.ஏ.எஸ்., பதவியை ராஜினாமா செய்த ராஜு, 2013ல் கட்சியில் சேர்ந்தார். இவர், தேசிய ஆலோசனை கவுன்சிலின், இணை செயலராக உள்ளார்.
மொத்தம், 34 பேரை உறுப்பினராகக் கொண்ட செயற்குழு, சமீபத்தில் கலைக்கப்பட்டது. இதற்கு தேர்தல் நடத்த வேண்டும் என்பதில், ராகுல் உறுதியாக உள்ளார். கலைக்கப்பட்ட செயற்குழுவுக்கு பதிலாக, உயர்நிலை குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. செயற் குழுவில் இருந்தவர்களில் பெரும்பாலானோர், இதிலும் உள்ளனர். அதே நேரத்தில், அமரீந்தர் சிங், விலாஸ் முல்தேம்வர், ஆர்.கே.தவான், எம்.வி.ராஜேசேகரன் போன்றோர் நீக்கப்பட்டு உள்ளனர்.
- நமது சிறப்பு நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து