வில்லனாக நடிக்க தோற்றம் அவசியமில்லை : அப்பாணி சரத் | சச்சினை சந்தித்த மகிழ்ச்சியில் புருவ அழகி..! | சிம்புவை ஒழித்து கட்ட கட்டப்பஞ்சாயத்து : டி.ராஜேந்தர் குமுறல் | எங்களை மன்னித்துவிடு மது : மம்முட்டி உருக்கம் | 1971-ஐ 'யுத்தபூமி' ஆக்கிய அல்லு சிரிஷ்..! | மார்ச் 1 முதல் ஸ்டிரைக், முடிவடையாத பிரச்சினை | நெடுவாசல் மக்களை சந்திக்கிறார் கமல் | இர்பான் - தீபிகா படம் தள்ளிப்போனது | சர்ச்சை சாமியார் ரஜினீஸ் வாழ்க்கை சினிமாவாகிறது | நல்ல கதைக்காக காத்திருந்தேன் - சாய் பல்லவி |
திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களைத் திரையிடும் கம்பெனிகளுக்கும் தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையில் மார்ச் 1ம் தேதி முதல் புதிய படங்களை எதையும் வெளியிடப் போவதில்லை என தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் கூட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் சங்கங்கள் இணைந்த கூட்டுக்குழுவும், டிஜிட்டல் முறையில் படங்களைத் திரையிடும் யுஎப்ஓ, கியூப் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே சில கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.
ஒரு படத்தைத் திரையிட டிஜிட்டல் முறையில் ஒரு தியேட்டருக்கு அந்தக் கம்பெனிகள் வாங்கும் 22,500 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக குறைத்துக் கொள்ள அவர்கள் சம்மதித்ததாகவும், ஆனால், அதை தயாரிப்பாளர் சங்கத்தினால் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தெரிகிறது. அந்தக் கட்டணத்தை மேலும் குறைக்க வேண்டுமென தயாரிப்பாளர்கள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதை டிஜிட்டல் கம்பெனிகள் ஏற்க மறுத்துவிட்டனராம். இதனால், முன்னர் அறிவித்தபடி மார்ச் 1ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிட தென்னிந்தித் திரைப்படத் தயாரிப்பாளர்களின் கூட்டுக்குழுவினர் முடிவெடுத்துள்ளார்கள்.
டிஜிட்டல் கம்பெனிகள் எப்படி கட்டணம் மூலம் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்பது குறித்து தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல் வெளியிட்டுள்ளார்.
“2 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட 'அருவி' படத்திற்காக நாங்கள் டிஜிட்டல் கட்டணமாக 50 லட்ச ரூபாய் செலவழித்துள்ளோம். அது 15 லட்ச ரூபாயில் முடிய வேண்டிய ஒன்று. 2017ம் ஆண்டில் நாங்கள் தயாரித்த நான்கு படங்களுக்காக 2.2 கோடியை டிஜிட்டல் கம்பெனிகளுக்கு செலுத்தியுள்ளோம். எங்களது பணம் 1.5 கோடியை வேறு யாரோ சாப்பிட்டுவிட்டார்கள். அந்தப் பணத்தில் நாங்கள் இன்னுமொரு படமே எடுத்திருக்கலாம்,” எனக் கூறியுள்ளார்.
இந்த ஸ்டிரைக்குக்கு தமிழ்நாடு தியேட்டர்காரர்கள் ஆதரவளிக்க மறுத்து வருகிறார்கள். ஏற்கெனவே, அதிக கட்டணம், முறையற்ற பார்க்கிங் கட்டணம், அதிக விலையில் உணவு பண்டங்கள் ஆகியவற்றை விற்கும் தியேட்டர்காரர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவளிக்காமல் இருப்பது அவர்கள் மீதான கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது.