பயங்கரவாதத்தை ஒழிக்க தவறிய பாக்.,குக்கு... சிக்கல்! Dinamalar
பதிவு செய்த நாள் :
சிக்கல்!
பயங்கரவாதத்தை ஒழிக்க தவறிய பாக்.,குக்கு...
அமெரிக்க பரிந்துரையை 35 நாடுகள் ஏற்பு

புதுடில்லி: பயங்கரவாத குழுக்களுக்கு, பாக்., அளித்து வரும் நிதி உதவியை நிறுத்தாததை கண்டித்து, பாரிசில் நடைபெற்ற, சட்டவிரோத பணப் பரிமாற்ற கண்காணிப்புக் குழு கூட்டத்தில், பாகிஸ்தானை, கறுப்புப் பட்டியலில் சேர்க்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது, பாக்., பொருளாதாரம் மற்றும் அரசியலில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

 பயங்கரவாதத்தை,ஒழிக்க, தவறிய ,பாக்.,குக்கு, சிக்கல்!


பாக்.,கில் உள்ள பயங்கரவாதக் குழுக்களுக்கு, அந்நாட்டு அரசு, ஆதரவு அளித்து வருவதை, உடனடியாக நிறுத்த வேண்டும் என்று, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் அறிவித்து இருந்தார். ஆனால், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர், ஹபீஸ் சயீத்துடன் நேரடி தொடர்பு கொண்ட, ஜமாத் - உத் - தவா மற்றும் பலா - இ - இன்சானியத் போன்ற, பயங்கரவாத அமைப்புகளுக்கு, பாக்., தொடர்ந்து நிதி உதவி அளித்து வந்தது.


இதையடுத்து, பாகிஸ்தானுக்கு வழங்கி வரும், ரூ.13 ஆயிரம் கோடிராணுவ நிதி உதவியை நிறுத்துவோம் என, அமெரிக்க அதிபர், டிரம்ப், பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும், பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்க, பாக்., தவறியது.


கண்காணிப்பு:


இந்நிலையில், சட்ட விரோத பணப் பரிமாற்ற கண்காணிப்பு குழு கூட்டம், ஐரோப்பிய நாடான,

பாரிசில் நடந்தது. இதில், அமெரிக்கா, இந்தியா, சீனா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட, 36 நாடுகள் கலந்து கொண்டன.உலகம் முழுவதும் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கான நிதி ஆதாரங்கள் எங்கிருந்து பெறப்படுகின்றன என்பதை, இக்குழு கண்காணித்து வருகிறது. இக்கூட்டத்தில், பயங்கரவாத செயல்களைஒடுக்க, பாக்., எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பலமுறை எச்சரித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்காததால், பாக்.,கை கறுப்புப் பட்டியலில் சேர்க்க, அமெரிக்கா பரிந்துரை செய்தது. இந்தியா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட, 35 நாடுகள், அமெரிக்காவின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டன.கண்காணிப்புக் குழுவில் உள்ள, 36 நாடுகளில், மூன்று நாடுகள், தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால், அத்தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது.


சீனா பல்டி




சீனா, சவுதி மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தங்களுக்கு ஆதரவாக ஓட்டு அளிக்கும், என, பாக்., எதிர்பார்த்தது. கடைசி நிமிடத்தில், சீனாவும், சவுதியும் பல்டி அடிக்க, துருக்கி மட்டுமே, பாக்.,குக்கு ஆதரவாக ஓட்டளித்தது.

பாக்., கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருப்பதால், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், பாக்.,கில் தொழில் செய்வதில் சிக்கல் ஏற்படும். பாக்.,கில் உள்ள தொழில்நிறுவனங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை, வெளிநாடுகளில் இருந்து பெறுவதிலும் சிக்கல் ஏற்படும் என தெரிகிறது.


மேலும், 19.50 லட்சம் கோடி ரூபாய் கடனை, ஜூன் இறுதிக்குள், பாக்., செலுத்தியாக வேண்டும். தவறினால், பாக்.,கின் கடன் தகுதி மதிப்பு, சர்வதேச அளவில், பின்னுக்கு தள்ளப்படும்.பாக்.,கில் விரைவில், பொது தேர்தல் நடக்க உள்ளது.

Advertisement

இந்நிலையில், இந்தகறுப்புப் பட்டியல் விவகாரம்,ஆளும், முஸ்லிம் லீக் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.அதோடு, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில், சர்வதேச அமைப்புகளை திருப்திபடுத்த முடியாத அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் போர்க் கொடி உயர்த்தும் அபாயம் எழுந்துள்ளது.


டிரம்புக்கு திருப்தி இல்லை



பாக்., கறுப்புப் பட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து, அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், ராஜ் ஷா கூறியதாவது: பாகிஸ்தான் உடனான உறவை பாதுகாக்க, எல்லா முயற்சிகளையும் அமெரிக்கா மேற்கொண்டது. இந்த முடிவு எடுக்கப் பட்டதற்கு, பாக்.,கின் பொறுப்பற்ற செயலே காரணம்.


கடந்த ஆகஸ்டில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் அறிவித்த தெற்காசிய கொள்கை திட்டத்தில், பயங்கரவாதத்தை ஒடுக்க, பாக்., இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என கூறி இருந்தார். ஆனால், பாக்., எடுத்த நடவடிக்கைகளில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் திருப்தி அடையவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-பிப்-201808:59:39 IST Report Abuse

Srinivasan Kannaiyaதிருந்தாத ஜென்மங்கள் இருந்து என்ன லாபம்...

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
24-பிப்-201808:38:30 IST Report Abuse

Kasimani Baskaranபாகிஸ்தானில் பொருளாதாரம் என்று ஒன்று இல்லை... அங்கு இனப்பெருக்கம் ஒரு பிரதான தொழில்... வரும் உற்பத்தியில் பாதி தீவிரவாதத்துக்கு உபயோகப்படுகிறது.. சீனாவின் காலனியாக வேகமாக மாற்றிக்கொண்டு வரும் பாகிஸ்தானை காப்பாற்ற ஆண்டவனால் கூட முடியாது...

Rate this:
P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-பிப்-201808:03:52 IST Report Abuse

P R Srinivasanஉப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான். பயங்கரவாதத்தை, சிறப்பாக வாழ விரும்பும் எந்த நாடும் ஆதரிக்காது. தீவிரவாதத்தை மறைமுகமாக ஆதரித்த அமெரிக்காவே இன்று அதை எதிர்த்து போராடும் நிலைமைக்கு வந்துள்ளது, அவர்களும் அதில் பாதிக்கப்படுவார்கள் என்று உணர்ந்த பின்பு.

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
24-பிப்-201808:03:11 IST Report Abuse

ஆரூர் ரங்எதிர்க்கட்சியாக இருக்கும்போது பயங்கரவாதிகளை ஆதரிப்பதும் ஆளும்கட்சியான பின்பு அமெரிக்க நிதிக்காக மிதவாதப்போக்கைக் கடைப்பிடிப்பதும் அங்கே வாடிக்கைதான் ,வஹாபிஸம் பரவும் எந்த நாட்டிலும் இதேநிலைமைதான் . நமது ஊரிலும் வஹாபியப்பரவலினால் சமுதாயத்தில் பெரும் மாற்றங்கள் வருகினற்ன எங்கு பார்த்தாலும் வெள்ளை துப்பட்டாவை விடுத்து முகத்தை மூடும் துப்பட்டாக்கள், பலகாலமாய் மத ஒற்றுமைக்கு உதவும் தர்காக்களுக்கு வெளியில் எதிர்ப்புப்பிரச்சாரங்கள் அளவுக்கு மிஞ்சின தாடிகள் இளைஞர்களிடையே தீவீரவாதப்போக்கு குண்டு வெடிப்பு என பல அடையாளங்கள் வெளிப்படையாகவே தெரிகின்றன. இது நல்லதில் விடாது . தடைசெய்யத்தயங்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்திலதான் மாட்டிக் கொள்கிறோம்

Rate this:
ilicha vaayan (sundararajan) - chennai,இந்தியா
24-பிப்-201804:16:48 IST Report Abuse

ilicha vaayan (sundararajan)கருப்பு செவப்பு வெள்ளை எல்லாம் பாகிஸ்தானுக்குப் புரியாது . பலமான அடி விழுந்தால் மட்டும் தான் புரியும். அங்க குண்டு போட்டு அவங்கள மொத்தமா வெச்சு செஞ்சா தான் உலகம் நன்மை பெரும் .

Rate this:
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
24-பிப்-201803:57:56 IST Report Abuse

என்னுயிர்தமிழகமேநீங்க எல்லாம் எழுதுவாங்க, ஆனா சீன ஏற்கனவே எல்லா விஷயத்தை யோசித்து வைத்திருப்பான்

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-பிப்-201802:23:06 IST Report Abuse

தமிழ்வேல் இருந்தாலும் வெட்டுனது போதாது. இன்னும் கொஞ்சம் வெட்டணும்.

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-பிப்-201802:22:22 IST Report Abuse

தமிழ்வேல் இதுலையாவது திருந்துறானுவோளான்னு பார்ப்போம்..

Rate this:
skv - Bangalore,இந்தியா
24-பிப்-201806:31:30 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>திருந்தாதுகள் வெறி ஜின்னா காலத்துலேந்து தீனி போட்டு வளந்துட்டானுகளே இதுவரை இருந்தவால்லே இவனுக ஓத்தானாவது நல்லவனா இருந்தாளா...

Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
24-பிப்-201802:06:07 IST Report Abuse

அன்புஇன்னமும் கருப்பு பட்டியலில் வரவில்லை. வாட்ச் லிஸ்டில் தான் வைக்கப்பட்டுள்ளது. இதுவே பாகிஸ்தானிற்கு ஒரு எச்சரிக்கையாக இருந்து, திருந்தினால் பரவா இல்லை. ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை, திருந்த வாய்ப்பே இல்லை. பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சி ஏற்பட சர்வதேச நாடுகள் முனைய வேண்டும். அதுவரை பாகிஸ்தான் உலக நாடுகளுக்கு ஒரு அச்சுறுத்தலாகத்தான் இருக்கும். பாகிஸ்தான் ஜனநாயகத்திற்கு திரும்ப சீனாவை இந்தியாவும் அமெரிக்காவும் வற்புறுத்த வேண்டும். ஆனால் அதை சீனாவே விரும்பாது என்பது தான் நமது தலைவலி. ஜனநாயகம் இல்லாத ஒரு பெரிய நாடு வல்லரசாக வளரும்போது, இந்த உலகம் பல பிரச்சனைகளை சந்திக்க போகிறது.

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
24-பிப்-201801:29:50 IST Report Abuse

Kuppuswamykesavanஅட சீனா பல்டி அடித்ததில், எந்த ஆச்சரியமோ அதிர்ச்சியோ இல்லைங்க. ஏன்னா?, சீனா கூட அதன் வடக்கு எல்லையோர மாநிலங்களில், இப்படிப்பட்ட மத பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு கொண்டுதான், இன்றைக்கும் இருக்குதுங்க. இன்னா ஒன்னு, சீனா, அதன் வலி வெளி உலகிற்கு காட்டாமலே, பில்டப்பா சமாளித்து, சீனாவில் ஏதும் நடக்காதது போல, சீன் போட்டு வருதுங்க. இப்ப புரியுதுங்களா?, சீனாவின், இந்த விசயத்தில், அதன் நிலையை.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement