புதுடில்லி:சர்வதேச அளவில், ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா, 81வது
இடத்தில் உள்ளது.
கடந்தாண்டில், ஊழல் அதிகம் நிகழ்ந்த நாடுகளின் பட்டியலை, ஐரோப்பிய நாடான, ஜெர்மனியைச் சேர்ந்த, 'டிரான்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு வெளியிட்டு உள்ளது.
இந்த பட்டியலில், பொதுத் துறையில், ஊழல் அதிகம் நிறைந்த நாடுகள் வரிசைப் படுத்தபட்டு உள்ளன. 2016ல், ஊழல் அதிகம் நிறைந்த, 176 நாடுகளின் பட்டியலில், இந்தியா,
79வது இடத் தில் இருந்தது. கடந்தாண்டில், 180 நாடுகளின் பட்டியலில்,
இந்தியா, 81வது இடம்
பெற்றுள்ளது . ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில், நியூசிலாந்து, டென்மார்க் நாடுகள் முதலிடத்தில் உள்ளன. சிரியா, தெற்கு சூடான், சோமாலியா போன்ற நாடுகள், ஊழல் அதிகம் நிறைந்த நாடு களாக உள்ளன. இந்த பட்டியலில் சீனா, 77வது இடத்திலும், பிரேசில், 96வது இடத்திலும், ரஷ்யா, 135வது இடத்திலும் உள்ளன.
இந்தியாவின், அண்டை நாடுகளான, பாகிஸ்தான், 117வது இடத்திலும், இலங்கை, 91வது இடத்திலும், வங்கதேசம், 143வதுஇடத்திலும் உள்ளன. ஊழல் குறைவாக உள்ள நாடு, முதலிடத்திலும், மிக அதிகமாக உள்ள நாடு, கடைசி இடத்திலும் இருக்கும் வகையில்,இந்த பட்டியல் தயாரிக்கப் பட்டு உள்ளது.
டிரான்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பினர்
கூறியதாவது: ஆசிய - பசிபிக் நாடுகளில், பத்திரிகையாளர்கள், சமூக அமைப்புகள், எதிர்க்கட்சி தலைவர்கள், சட்ட அமலாக்க அலுவலர்கள், ஆட்சியாளர்களால் மிரட்டப் படுவதும், கொலை செய்யப்படுவதும், ஊழல் அதிகம் பரவ காரணமாக உள்ளது.
பிலிப்பைன்ஸ், இந்தியா, மாலத்தீவு போன்ற நாடுகள், ஊழலால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (12+ 44)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply