அமலாபாலின் திறமைக்கு தீனி போடவில்லை : இயக்குனர் வருத்தம் | மோகன்லால் - நிவின்பாலி படத்தில் துல்கரின் நண்பர் | திரைப்பட விழாவில் அனுமதிக்கப்படாத செக்ஸி துர்கா சென்சாரில் தப்பிய அதிசயம்..! | கம்யூனிஸ்ட் போராளியாக மாறிய மம்முட்டி | தமிழ் - தெலுங்கு பேச வரும் மலையாள 'வில்லன்' | களத்திற்கு வாங்க : கமல் அழைப்பு | விவசாயத்தில் ரூ.1.5 லட்சம் சம்பாதிக்கும் கார்த்தி | பள்ளி கட்டடம் கட்ட உதவிய மகேஷ்பாபு | பெரியம்மா ஆனார் காஜல் அகர்வால் | போட்டியே இல்லாத களத்தில் ரஜினியின் காலா |
கடந்த அக்டோபர் மாதம் மலையாளத்தில் மோகன்லால் மற்றும் விஷால் இணைந்து நடித்த 'வில்லன்' படம் வெளியானது. மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனராக அறியப்படும் பி.உன்னிகிருஷ்ணன் நான்காவது முறையாக மோகன்லாலை வைத்து இயக்கிய இந்தப்படத்தின் மூலம், விஷால் முதன்முதலாக மலையாளத்தில் அடியெடுத்து வைத்தார்.
விஷால் மட்டுமல்ல, ஹன்சிகாவும், நடிகை ராசி கன்னா மற்றும் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் இந்தப்படத்தின் மூலம் மலையாள சினிமாவுக்குள் அதிரடி என்ட்ரி கொடுத்தனர்.
எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் டீசன்ட்டான வெற்றியை பெற்ற இந்தப்படம், தற்போது தமிழில் 'மிஸ்டர் வில்லன்' என்றும் தெலுங்கில் 'புலி ஜூதம்' என்கிற பெயரிலும் டப்பிங் செய்யப்பட்டு விரைவில் வெளியாக இருக்கிறது.
இரண்டு மொழிகளுக்குமே நன்கு அறிமுகமான நட்சத்திர பட்டாளம் இருப்பதால் இரண்டு மொழிகளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.