சென்னை:'இறக்குமதி மணலுக்கு, நியாயமான விலையை நிர்ணயித்து வழங்குவதை, அரசு உறுதி செய்யும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், பொதுப்பணித் துறை பதில் அளித்துள்ளது. விசாரணை, மார்ச், 14 க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
'தினமலர்' நாளிதழின், கோவை பதிப்பின் வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் தாக்கல் செய்த மனு:
தமிழக அரசு, 2017 டிசம்பரில் பிறப்பித்த உத்தரவில், 'வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் மற்றும் இதர மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மணலை, தமிழகத்தில், பொதுப்பணித் துறை மட்டுமே விற்க வேண்டும். இறக்குமதி செய்யப்பட்ட மணலை, சொந்த உபயோகத் துக்கோ அல்லது விற்பனைக்கோ, தமிழகத்தை விட்டு வேறு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கொண்டு செல்லவோ அனுமதி கிடையாது' என, கூறப்பட்டுள்ளது.
அரசாணையில் பிறப்பிக்கப்பட்ட நிபந்தனை கள், வழிமுறைகள், சட்டத்துக்கு முரணாக
உள்ளன. இறக்குமதி செய்த மணலை எடுத்து சென்று, தேக்கி வைத்து,
விற்பனை செய்யும் இறக்குமதியாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.
சொந்த
உபயோகத்துக்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த நிபந்தனைகள்,
அரசியல் சட்டத்துக்கு முரணானவை. எனவே, தமிழக அரசு பிறப்பித்தஉத்தரவை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, அப்துல் குத்துாஸ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர், பி.வில்சன், அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல், விஜய் நாராயண் ஆஜராகினர். விசாரணையை, மார்ச், ௧௪க்கு, முதல் பெஞ்ச் தள்ளிவைத்தது.அரசு சார்பில், பொதுப்பணித் துறையின் சிறப்பு செயலர், கே.பத்மநாபன் தாக்கல் செய்த பதில் மனு:
தமிழகத்தில், குவாரிகளில் எடுக்கப்பட்ட மணலை பாதுகாக்கவே, இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சட்டவிரோத குவாரியை தடுக்கவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மணல்இறக்குமதி வணிகத்தில், அரசு குறுக்கிடவில்லை. மணல் இறக்குமதி செய்யப்பட்ட
பின், அதை விற்க, தேக்கி வைக்க, கொண்டு செல்ல, இறக்குமதியாளர்களுக்கு உரிமை
இல்லை. அந்த உரிமை, அரசுக்கு மட்டுமே உள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பொது நலன்
கருதியும், அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. சட்டப்பூர்வமாக குவாரிகளில் எடுக்கப்பட்ட மணல், கட்டுமான நிறுவனங்களும், மக்களும் வாங்க கூடிய விலையில் கிடைக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சட்டவிரோத குவாரியை தடுக்க, அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இறக்குமதி செய்யப்படும் மணலை, பொதுப்பணித் துறைக்கு மட்டுமே, துறை நிர்ணயித்த விலைக்கு விற்க வேண்டும். மணல் இறக்குமதி உரிமையை தடுப்பது, அரசின் நோக்கம் அல்ல; பொதுநலன் கருதி, முறைப்படுத்துவதே நோக்கம்.
இறக்குமதியாளர்களிடம் இருந்து மணலை வாங்கும் போது, நியாயமான விலையை நிர்ணயித்து, அரசு வழங்கும்.விதிமுறைகள் இன்றி, இறக்குமதி மணலை விற்க அனுமதித் தால், சட்டவிரோதமாக மணல் எடுப்பதற்கு வழி வகுக்கும். அரசுக்கும், வருவாய் இழப்பு ஏற்படும்.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து