ரஜினியின் அடுத்தபடம் அறிவிப்பு : கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் | பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா துவங்கியது | போரும் வந்தது, புயலும் வந்தது | அன்பு செழியன் வழக்கு : தடை நீக்க கோரி சசிகுமார் மனு | கருவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் | பெங்களூர் பிக்பாஸ் வீட்டில் தீவிபத்து: 8 கோடி சேதம் | அரசியலுக்கு கட்டமைப்பு முக்கியம், அடித்தளத்தை வலுவாக்க வேண்டும் : ரஜினி | உங்கள் ஜோ? | காலா ஏப்ரல் 14 வராதது ஏன்? | சினிமாவில் தினமும் கற்று கொண்டு இருக்கிறேன் : தன்ஷிகா |
2012ம் ஆண்டு வெளிவந்த பீட்சா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். ஜிகர்தண்டா படத்தின் மூலமும் பெரிதும் பேசப்பட்டார். அடுத்து இறைவி படத்தை இயக்கினார். அந்தப் படம் அவருக்கு சரியான படமாக அமையவில்லை. அடுத்து பிரபுதேவா நடிக்கும் மெர்குரி படத்தை இயக்கி வருகிறார்.
அடுத்து ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே சன் பிக்சர்ஸ், விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தைத் தயாரித்து வருகிறது. அந்தப் படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறது.
ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்திற்குப் பிறகு அந்த நிறுவனமும், ரஜினியும் மீண்டும் இணையும் படம் இது. ரஜினிகாந்த் நடித்துள்ள காலா, 2.0 படங்கள் வெளிவராத நிலையில் அதற்குள் ரஜினியின் அடுத்த பட அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்க உள்ள நிலையில் இந்தப் புதிய பட அறிவிப்பு திரையுலகத்திலும், அரசியல் உலகத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.