வாஷிங்டன:அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கு, வெளிநாட்டைசேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும், 'எச் - 1 பி' விசா முறையில், புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
இது, இந்திய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பாக இருக்கும் என, எதிர்பார்க்கப்
படுகிறது. அமெரிக்காவில் பணியாற்று வதற்காக, வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, 'எச் - 1 பி' விசா வழங்கப்படுகிறது.
பாதிப்பு
இந்த விசாவை பெறுவதில், இந்திய நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன.
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்த விசாவை அதிகளவில் பயன்படுத்துகின்றன. அமெரிக்க அதிபராக, டொனால்டு
டிரம்ப், 2017ல் பதவியேற்றது முதல், 'அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை' என
அறிவித்து, பல திட்டங்களை அறிவிக்கிறார். இதனால், வெளிநாட்டைச் சேர்ந்த
நிறுவனங்கள், குறிப்பாக, இந்திய நிறுவனங்கள் அதிகம்பாதிக்கப்பட்டன.
ஏற்கனவே, பல கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை, டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது, உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டு உள்ளது.புதிய அறிவிப்பில் கூறியுள்ளதாவது:'எச் - 1 பி' விசா, வழக்கமாக, மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். தற்போதைய புதிய முறையின்படி, இந்த விசாவை பெறுபவர், அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தில், எந்த குறிப்பிட்ட பணிக்காக, எவ்வளவு காலத்துக் காக இருக்க வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும்.
சம்பளம் இல்லை
அதற்கேற்ப, மூன்று ஆண்டுகளுக்கு குறைவாகவும் விசா வழங்க
முடியும். அதே போல், விசா புதுப்பிக் கும் போதும், முந்தைய விசாவில்
குறிப்பிட்ட படி பணியாற்றியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய
வேண்டும்.இது
போன்ற பல கட்டுப்பாடுகள், புதிய அறிவிப்பில் உள்ளன. இது குறித்து, அமெரிக்க
குடியேற்ற துறை கூறியுள்ளதாவது:
விசாவில் கூறப்பட்டுள்ளவை மீறப்படுவதால், அமெரிக்கர்களுக்கான வேலை பாதிக்கப் படுகிறது; இந்திய ஊழியர்களும் பாதிக்கப் படுகின்றனர்.குறிப்பிட்ட அமெரிக்க நிறுவனம், தன் ஒப்பந்தத்தை ரத்து செய்தால், அந் நிறுவனத்துக்காக அழைத்து வரப்பட்டுள்ள ஊழியர்களுக்கு,இந்திய நிறுவனங்கள் சம்பளம் கொடுப்பதில்லை.
இது போன்ற முறைகேடுகள் நடப்பதை தடுக் கவே, இந்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இவ்வாறு குடியேற்ற துறை கூறியுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து