பேச்சுவார்த்தை தோல்வி : மார்ச் 1 முதல் ஸ்டிரைக் உறுதி | ரஜினியின் அடுத்தபடம் அறிவிப்பு : கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் | பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா துவங்கியது | போரும் வந்தது, புயலும் வந்தது | அன்பு செழியன் வழக்கு : தடை நீக்க கோரி சசிகுமார் மனு | கருவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் | பெங்களூர் பிக்பாஸ் வீட்டில் தீவிபத்து: 8 கோடி சேதம் | அரசியலுக்கு கட்டமைப்பு முக்கியம், அடித்தளத்தை வலுவாக்க வேண்டும் : ரஜினி | உங்கள் ஜோ? | காலா ஏப்ரல் 14 வராதது ஏன்? |
10வது பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா பெங்களூரில் நேற்று தொடங்கியது. முதல்வர் சித்தராமய்யா இதனை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் மூத்த இயக்குனர் ராகேஷ் ஓம்.பிரகாஷ், நடிகர் சிவராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நேற்று தொடங்கிய இந்த விழா வருகிற மார்ச் 1-ம் தேதி வரை நடக்கிறது. இதில் 68 நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 படங்கள் திரையிடப்படுகிறது. இந்த விழாவில் தமிழ்நாட்டிலிருந்து ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய டூ லெட் படமும், பிரசன்னா இயக்கிய எழுத்தாளர் அசோகமித்ரன் பற்றிய ஆவணப்படமும் திரையிடப்படுகிறது.
இது தவிர சர்வதேசம், ஆசியா, இந்தியா, கன்னடம் ஆகிய பிரிவின் கீழ் போட்டிப்படங்களும் திரையிடப்படுகிறது. பெங்களூர் ஓரியன் மாலில் உள்ள 11 திரையரங்குகளில் இந்த படங்கள் திரையிடப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதிலிருந்து இயக்குனர்கள், நடிகர் நடிகைகள் வந்திருக்கிறார்கள்.