கோஹிமா:''வட கிழக்கு மாநிலமான, நாகாலாந்துக்கு வளர்ச்சி திட்டங்கள் முழுமை யாக கிடைக்க, வலுவான, நிலையான அரசு தேவை. அதை, பா.ஜ., - என்.டி.பி.பி., எனப்படும், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி கூட்டணி அளிக்கும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
தேர்தல்
நாகாலாந்தில், முதல்வர், டி.ஆர்.ஜெலியாங் தலைமையில், நாகாலாந்து மக்கள் முன்னணி அரசு அமைந்துள்ளது. மொத்தம், 60 தொகுதிகள் உடைய நாகாலாந்து சட்டசபைக்கு, 27ல் தேர்தல் நடக்க உள்ளது.அதற்காக, நாகாலாந் தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:
நாகாலாந்துக்கு தேவையான திட்டங்கள் கொண்டு வரப்படும். மாநிலம் முழுவதும், சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். இவற்றுக் கான நிதி, முழுமையாக கிடைக்கும்படி, அதில் இழப்பு ஏற்படாமல் தடுக்கப்படும்.மாநிலத்தில் வலுவான, நிலையான அரசு இருந்தால் தான்,
வளர்ச்சி பணிகள் நிறைவேறும்.பா.ஜ., -என்.டி.பி.பி., கூட்டணி, அந்த அரசை உங்களுக்கு தரும்.
ரூ.10,000 கோடி:
நான்கு
ஆண்டுகளுக்குள், மாநிலத்தில்,500 கி.மீ.,நீள தேசிய நெடுஞ்சாலையை, மத்திய
அரசு அமைத்துள்ளது. மேலும், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடவும்
திட்டமிடப்பட்டு உள்ளது. தொழில் நுட்பங்கள் மூலம், மாநிலத்துக் கானநிதி, அந்தந்த திட்டத்துக்கு கிடைப்பதை உறுதி செய்வோம்.நாகாலாந்து உட்பட, வட கிழக்கு மாநிலங்களில் இயற்கை விவசாயம் சிறப்பாக உள்ளது. இவ்வாறு பயிரிடப்படும் உணவுப் பொருட் களுக்கு, சர்வதேச அளவில் சந்தையை உருவாக்கு வோம்.இவ்வாறு அவர் கூறினார். சட்டசபை தேர்தலில், பா.ஜ., 20 தொகுதிகளிலும், என்.டி.பி.பி., 40 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
114 கோடீஸ்வரர்கள் போட்டி
வட கிழக்கு மாநிலமான, நாகாலாந்தில் நடக்க உள்ள, சட்டசபை தேர்தலில் போட்டியிடும், 196 வேட்பாளர்களில், 114 பேர், கோடீஸ்வரர்கள். நாகாலாந்தில், முதல்வர், டி.ஆர்.ஜெலியாங் தலைமையில், நாகாலாந்து மக்கள் முன்னணி அரசு அமைந்துள்ளது. மொத்தம், 60 தொகுதிகள் உடைய சட்டசபைக்கு, 27ல், தேர்தல் நடக்க உள்ளது. இதில், 196 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த வேட்பாளர்கள் குறித்து, ஏ.டி.ஆர்.,
எனப்படும், ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் என்ற, அரசு சாரா அமைப்பு
ஆய்வு செய்து, வெளியிட்டுள்ள அறிக்கை:மொத்தமுள்ள, 196 வேட்பாளர்களில்,
3பேரின் தகவல்கள் சரியாக கிடைக்க வில்லை. மீதமுள்ள, 193 பேரைஆய்வு செய்ததில், 114 பேர் கோடீஸ்வரர்கள்.ஐக்கிய ஜனதா தள வேட்பாளரும், முன்னாள், ஐ.ஏ.எஸ்., அதிகாரி யுமான, ராமோங்கோ லோதா, 38.92 கோடி ரூபாய் சொத்துகளுடன், மிகப்பெரிய பணக்கார வேட்பாளராக உள்ளார்.ஆம்ஆத்மியின், அகாவி ஜிமோமி, தனக்கு எந்த அசையும் மற்றும் அசையா சொத்தும் இல்லை என, கூறியுள்ளார்.
மொத்தம், 46 வேட்பாளர்கள், ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளதாக தெரிவித்து உள்ளனர். 42 பேர், இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளதாகவும், 50 பேர், 50 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளதாகவும், வேட்புமனுவில் குறிப்பிட்டு உள்ளனர்.
மூன்று வேட்பாளர்கள், தங்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாக கூறிஉள்ளனர். மொத்த வேட்பாளர்களில், மூன்று பேர் படிப்பறிவு இல்லாதவர்கள்; 16 பேர், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர்; 5 பேர், டாக்டர் பட்டம் பெற்றவர் கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (2)
Reply
Reply