இயக்குநர் மிஷ்கினின் பேச்சை இடைமறித்த சாந்தனு! | நடிகர் ரகுமானை ஏமாற்றிய ஏ.ஆர்.ரெஹானா | ஈகோ பிரச்னையில் மகேஷ்பாபு - அல்லு அர்ஜூன் | ராஜமவுலி படத்தில் ராக்ஷி கண்ணா? | ரகுல் பிரீத் சிங்கை ஏமாற்றிய ஹிந்தி படம் | 8 ஆண்டுகளை நிறைவு செய்த ராணா | மார்ச் 10-ந்தேதி காலா டீசர்? | சாய் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் | என்டிஆரின் மனைவியாக நடிக்க மறுத்த நித்யாமேனன்! | தமிழ்ப் படத்தில் நடிப்பதா, புனித் ராஜ்குமாருக்கு எதிராக ஆர்பாட்டம்? |
2010-ல் லீடர் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் ராணா. அப்படம் 2010 பிப்ரவரி 19-ந்தேதி ரிலீசானது. அந்த வகையில் திரையுலகிற்கு வந்து 8 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டார் ராணா. அதோடு, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இதுவரை 23 படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில், இதுவரை ரொமான்ஸ், ஆக்சன், அரசியல், சரித்திரம் என பலதரப்பட்ட கதைகளில் நடித்துள்ள ராணாவுக்கு பாகுபலியில் நடித்த பல்லாலதேவா கதாபாத்திரம் பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது.
நடிப்புக்காக பல விருதுகளையும் பெற்று பாராட்டுக்கள் பெற்றுள்ள ராணா, தற்போது தெலுங்கு, ஹிந்தியில் தயாராகும் ஹாதி மேரே சாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்னும் மாறுபட்ட கதைகளில் நடித்து திரையுலகில் பெரிய சாதனைகளை புரிய தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் ராணா.