கமலின் இந்தியன் 2-வில் அஜய் தேவ்கன் | பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார்? | இயக்குநர் மிஷ்கினின் பேச்சை இடைமறித்த சாந்தனு! | நடிகர் ரகுமானை ஏமாற்றிய ஏ.ஆர்.ரெஹானா | ஈகோ பிரச்னையில் மகேஷ்பாபு - அல்லு அர்ஜூன் | ராஜமவுலி படத்தில் ராக்ஷி கண்ணா? | ரகுல் பிரீத் சிங்கை ஏமாற்றிய ஹிந்தி படம் | 8 ஆண்டுகளை நிறைவு செய்த ராணா | மார்ச் 10-ந்தேதி காலா டீசர்? | சாய் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் |
தெலுங்கில் மகேஷ்பாபு நடித்துள்ள புதிய படம் பாரத் அனே நேனு. இந்த படத்தை ஏப்ரல் 26-ந்தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். அதேபோல் அல்லு அர்ஜூன் நடித்துள்ள படம் நா பேரு சூர்யா. இந்த படத்தையும் ஏப்ரல் 26-ந்தேதியே வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.
ஆனால் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானால் வசூல் பாதிக்கும் என்பதால், மகேஷ்பாபு படத்தை ஒரு வாரத்திற்கு முன்போ அல்லது அல்லு அர்ஜூன் படத்தை ஒரு வாரத்திற்கு பிறகோ வெளியிடுமாறு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் என்ற இரண்டு நடிகர்களின் படங்களுமே ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுப்பதாக இல்லையாம். வேண்டுமானால் அவர்கள் படத்தை வேறு தேதியில் வெளியிட சொல்லுங்கள் என்று இரண்டு படக்குழுவினருமே விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார்களாம்.
இருப்பினும், ஏதேனும் ஒரு படத்தை ஏப்ரல் 26-ந்தேதி வெளியிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தினர் முயற்சியை தொடர்ந்து வருகிறார்கள்.