கமலின் இந்தியன் 2-வில் அஜய் தேவ்கன் | பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார்? | இயக்குநர் மிஷ்கினின் பேச்சை இடைமறித்த சாந்தனு! | நடிகர் ரகுமானை ஏமாற்றிய ஏ.ஆர்.ரெஹானா | ஈகோ பிரச்னையில் மகேஷ்பாபு - அல்லு அர்ஜூன் | ராஜமவுலி படத்தில் ராக்ஷி கண்ணா? | ரகுல் பிரீத் சிங்கை ஏமாற்றிய ஹிந்தி படம் | 8 ஆண்டுகளை நிறைவு செய்த ராணா | மார்ச் 10-ந்தேதி காலா டீசர்? | சாய் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் |
கபாலியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. மும்பை தாராவி பகுதியில் வாழும் தமிழர்களின் காட்பாதராக இந்த படத்தில் நடித்துள்ளார் ரஜினி. ரஜினியுடன் ஹூமா குரோஷி, நானா படேகர் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிந்து விட்டபோதும், 2.O படத்திற்காக காலா படத்தின் ரிலீசை தள்ளி வைத்தனர். அதனால் காலா டீசர் வெளியீட்டையும் தள்ளி வைத்திருந்தனர்.
தற்போது 2.O ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டிருப்பதால், அந்த படம் வெளியாகயிருந்த ஏப்ரல் 27-ந்தேதி காலா திரைக்கு வருகிறது. அதனால், காலா படத்தின் டீசரை மார்ச் 10-ந்தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக உள்ளது.