சினிமாவில் தினமும் கற்று கொண்டு இருக்கிறேன் : தன்ஷிகா | கமலின் இந்தியன் 2-வில் அஜய் தேவ்கன் | பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார்? | இயக்குநர் மிஷ்கினின் பேச்சை இடைமறித்த சாந்தனு! | நடிகர் ரகுமானை ஏமாற்றிய ஏ.ஆர்.ரெஹானா | ஈகோ பிரச்னையில் மகேஷ்பாபு - அல்லு அர்ஜூன் | ராஜமவுலி படத்தில் ராக்ஷி கண்ணா? | ரகுல் பிரீத் சிங்கை ஏமாற்றிய ஹிந்தி படம் | 8 ஆண்டுகளை நிறைவு செய்த ராணா | மார்ச் 10-ந்தேதி காலா டீசர்? |
பாகுபலி-2 படத்தை அடுத்து தனது புதிய படம் குறித்த தகவலை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார் ராஜமவுலி. மல்டி ஹீரோ கதையில் உருவாகும் அந்த படத்தில் ஏற்கனவே தனது படங்களில் நடித்துள்ள ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் நடிப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், இந்த படமும் பாகுபலி படத்தைப்போன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் தயாராவதால், சில தமிழ் நடிகர்கள் மற்றும் ஹிந்தி நடிகர்கள் நடிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், சமீபத்தில் தெலுங்கில் வெளியான தொலி பிரேமா படத்தைப்பார்த்த ராஜமவுலி, அந்த படத்தில் நாயகியாக நடித்திருந்த ராக்ஷி கண்ணாவின் நடிப்பையும், அவரது அழகையும் வெகுவாக புகழ்ந்து, பாராட்டி பேசியிருந்தார். அதையடுத்து ராஜமவுலியின் புதிய படத்தில் ராக்ஷி கண்ணாவும் நாயகியாக நடிப்பதாக டோலிவுட்டில் செய்திகள் பரவியுள்ளன. ஆனால் ராஜமவுலி இதுகுறித்து எந்த தகவலையும் இன்னும் வெளியிடவில்லை.