புதுடில்லி:பிரபல பாலிவுட் நடிகர், அமிதாப் பச்சன், அரசியலில் திடீர் ஆர்வம் காட்டி வருகிறார். காங்., மூத்த தலைவர்கள் உட்பட, பல அரசியல்வாதிகளை, 'டுவிட்டரில்' அவர் பின் தொடர்கிறார்.
பிரபலம்
பாலிவுட் நடிகர், அமிதாப் பச்சன், 75, சமூக தளங்களில் மிகவும் பிரபலம். டுவிட்டரில் அவரை, 3.31 கோடி பேர் பின் தொடர்கின்றனர். அதே நேரத்தில், அவர், 1,689 பேரை பின் தொடர் கிறார். சமீபகாலமாக அவர், பல அரசியல்வாதி களை பின் தொடர்கிறார். குறிப்பாக, காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரை, அவர் பின்
தொடர்கிறார். இது, அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேரு - இந்திரா குடும்பத்துடன், மிக நெருக்கமாக இருந்தவர், அமிதாப் பச்சன். முன்னாள் பிரதமர், ராஜிவின்நெருங்கிய நண்பர். சில காலம், காங்கிரசுக்கு ஆதரவாக இருந்த அவர், பின், அரசியலில் இருந்து ஒதுங்கினார்.இந்நிலையில் திடீரென, காங்., தலைவர், ராகுல் மற்றும் காங்., அதிகாரபூர்வ முகவரிகளை, அமிதாப், டுவிட்டரில் பின் தொடர்கிறார்.
எதிர்பார்ப்பு
காங்., மூத்த தலைவர்கள், சிதம்பரம், கபில் சிபல், அஹமது படேல், அசோக் கேலாட், ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின் பைலட், சி.பி.ஜோஷி ஆகியோரை, இந்த மாதத்தில் இருந்து பின்தொடர்கிறார்.இது தவிர, பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களையும், அவர் பின் தொடர்கிறார். ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர், லாலு பிரசாத், அவரது மகளும், எம்.பி.,யுமான, மிசா பார்தி, ஐக்கிய ஜனதா தளத் தலைவரும்,பீஹார் முதல்வருமான, நிதிஷ் குமார்,
மார்க்.கம்யூ., பொதுச் செயலர், சீதாராம் யெச்சூரி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர், ஒமர் அப்துல்லா ஆகியோரை, அமிதாப் பின் தொடர்கிறார்.
ஆம் ஆத்மி மூத்த தலைவர்களான, கோபால் ராய், சஞ்சய் சிங், குமார் விஸ்வாஸ், ஆஷிஷ் கேத்தான் ஆகியோரையும் பின் தொடர்கிறார். பா.ஜ.,வில், பல மூத்த தலைவர்களையும், அமிதாப் பின் தொடர்கிறார். அமிதாப் பச்சனின் இந்த திடீர் அரசியல் ஆர்வம், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து