மும்பை:'அரசியல்வாதிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல; கடவுளும் அல்ல' எனக் கூறிய, மும்பை உயர் நீதிமன்றம், சதுப்புநில காட்டை அழித்து, ஆக்கிரமிப்பு செய்த, இரு அரசியல் பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு செய்ய, போலீசாருக்கு உத்தரவிட்டது.
பொதுநல மனு
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா
கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த, 2016ல், பாரத் மொகால் என்பவர், மும்பை ,உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு:பா.ஜ.,வைச் சேர்ந்த,
பரசுராம் மஹாத்ரே, சிவசேனாவை சேர்ந்த, அனிதா பாட்டீல் ஆகியோர்,
'மாங்குரோவ்' எனப்படும் சதுப்புநில காட்டை அழித்து, ஆக்கிரமித்து, வீடு மற்றும் அலுவலகங்களை கட்டிஉள்ளனர்.
அரசியல்வாதிகள் என்பதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, போலீசார் தயங்குகின்றனர். இது குறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், உள்ளூர் தாசில்தார் விசாரணை நடத்தி, சதுப்புநில பகுதியை அழித்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை உறுதி செய்து, அறிக்கை தாக்கல்செய்தார். இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்று, இந்த வழக்கை
நீதிபதிகள், எஸ்.சி.தர்மாதிகாரி, பாரதி டாங்கிரி ஆகியோர் விசாரித்தனர்.
உத்தரவு:
அப்போது, 'அரசியல்வாதிகள் சட்டத் திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல; கடவுளும் அல்ல. எனவே, ஆக்கிரமிப்பு செய்யும் அரசியல்வாதிகள் மீது, போலீசார் தயங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். 'குற்றஞ்சாட்டப் பட்ட, பா.ஜ., -சிவசேனாவைச் சேர்ந்த, பரசுராம் மற்றும் அனிதா பாட்டீல் மீது, ஒரு வாரத்திற் குள், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (21)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply